sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ரூ.15 கோடிக்கு சொத்து குவித்த எம்.எல்.ஏ.,வின் உதவியாளர்!

 ரூ.15 கோடிக்கு சொத்து குவித்த எம்.எல்.ஏ.,வின் உதவியாளர்!

 ரூ.15 கோடிக்கு சொத்து குவித்த எம்.எல்.ஏ.,வின் உதவியாளர்!


PUBLISHED ON : மார் 10, 2026 02:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2026 02:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ லக்காய் டீயை பருகியபடியே, “இடமாறுதல் போட்டும் கிளம்ப மாட்டேங்கிறாங்க பா...” என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

“எந்த துறையில வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

“தேர்தல் வர்றதால, சென்னை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள உதவி பொறியாளர்கள், ஜூனியர் பொறியாளர்கள்னு, 17 பேருக்கு கடந்த ஜனவரி மாசமே இடமாறுதல் போட்டாங்க... ஆனா, 17 பேர்ல பெரும்பாலானவங்க, புதுசா போட்ட இடத்துக்கு போகாம, பழைய இடங்கள்லயே பணியில நீடிக்கிறாங்க பா...

“இப்ப, தங்களுக்கு வேண்டிய மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி புள்ளிகளை பார்த்து, இப்ப இருக்கிற இடத்துலயே பணியில் நீடிக்க உத்தரவு வாங்க முயற்சி பண்ணிட்டு இருக்காங்க... இதனால, 'மாநகராட்சி கமிஷனர் போட்ட உத்தரவுக்கே மதிப்பில்லையா'ன்னு மண்டல ஊழியர்கள் எல்லாம் வருத்தப்படுறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.

“ஹிந்து நாடார்கள் எல்லாம் அதிருப்தியில இருக்காவ வே...” என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“தென் மாவட்டங் கள்ல, ஹிந்து நாடார் சமுதாயத்தினர் அதிகமா இருக்காங்கல்லா... 2024 லோக்சபா தேர்தல்ல தி.மு.க., சார்பில் போட்டியிட்ட 21 பேரில், ஒருத்தர் கூட ஹிந்து நாடார் இல்ல வே...

“இதனால, இப்ப ராஜ்யசபா தேர்தல்லயாவது ஹிந்து நாடாருக்கு வாய்ப்பு தருவாங்கன்னு எதிர்பார்த்தாவ... ஆனா, இப்ப தி.மு.க., அறிவிச்சிருக்கிற ரெண்டு வேட்பாளர்களும் வேற சமுதாயத்தை சேர்ந்தவங்க தான்...

“லோக்சபா, ராஜ்யசபான்னு தி.மு.க.,வுக்கு மொத்தமா, 29 எம்.பி.,க்கள் இருந்தும், அதுல ஒருத்தர் கூட ஹிந்து நாடார் இல்லன்னு சொல்லுதாவ... இது சம்பந்தமா, மாநில நிர்வாகிகளிடம் கேட்டா, 'துாத்துக்குடி எம்.பி., கனிமொழி இருக்காங்களே'ன்னு கையை காட்டுதாவ... ஆனா, 'அவங்க, கருணாநிதி குடும்ப கணக்குல வர்றாங்க... அதை காட்டி எங்களை ஏமாத்துறதா'ன்னு தென் மாவட்ட தி.மு.க.,வுல இருக்கிற ஹிந்து நாடார்கள் புலம்புதாவ வே...” என்றார், அண்ணாச்சி.

“கிட்டத்தட்ட, 15 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருக்கார் ஓய்...” என்றார், குப்பண்ணா.

“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.

“திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன்... இவரது மருத்துவமனையில், கிட்னி திருட்டு நடந்ததா சர்ச்சை எழுந்துது ஓய்...

“இவர்கிட்ட, மூணு வருஷமா ஒருத்தர் உதவியாளரா இருக்கார்... இவரது அப்பா பட்டாணி வியாபாரம் பண்றார்... இந்த உதவியாளர், அவரது சித்தி மகன்கள் ரெண்டு பேருக்கும், ஆறு சொகுசு கார்கள், டாரஸ் லாரிகள், டிப்பர்கள், வேன்கள் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கார் ஓய்...

“தாளக்குடி பகுதியில், 2 கோடி ரூபாய் மதிப்பில் உதவியாளர் வீடு கட்டியிருக்கார்... சாதாரண குடும்பத்துல இருந்து வந்த இவரோட தற்போதைய சொத்து மதிப்பு, 15 கோடி ரூபாயை தாண்டும் ஓய்...

“இதனால, 'நேர்மையா சம்பாதிச்சு இவ்வளவு சொத்துக்களை சேர்த்திருக்க முடியுமா... இவரோட செயல்பாடுகள் எல்லாம் கதிரவனுக்கு தெரியுமா அல்லது தெரிஞ்சும் தெரியாதது மாதிரி இருக்காரா'ன்னு உள்ளூர் தி.மு.க.,வினர் முணுமுணுக்கறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.

“லோகேஷ், நாளைக்கு பார்க்கலாம் பா...” என, நண்பரிடம் அன்வர்பாய் விடைபெற, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us