'மைக்கோப்ளூம்ஸ்' காளான் இன்குபேஷன் மையம் துவக்கம்
'மைக்கோப்ளூம்ஸ்' காளான் இன்குபேஷன் மையம் துவக்கம்
PUBLISHED ON : மார் 19, 2026 05:42 AM

கோவை: இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில், 'மைக்கோப்ளூம்ஸ் மஷ்ரூமரி இன்குபேஷன்' சென்டர் துவக்கப்பட்டது.
பூஞ்சையியல் ஆராய்ச்சி மற்றும் கார்டிசெப்ஸ் சாகுபடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மையமாக இது செயல்படும். உள்ளூர் தொழில்முனைவோர் சொந்தமாக காளான் தொழில் துவங்கி, விரிவுபடுத்த தேவையான திறன்களையும் இம்மையம் வழங்கும்.
உயிரித்தொழில்நுட்ப தொடக்க மானிய திட்டம் (பிக்), 'பிராக்' உட்பட மதிப்பு மிக்க அரசு நிதியுதவிகளை இம்மையம் பெற்றுள்ளது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆர்.கே.வி.ஒய்., மானியம், தமிழக அரசின் 'டான்சீடு' மத்திய அரசின் வேளாண் தொழில்முனைவோர் வழிகாட்டுதல் திட்டம் போன்றவற்றின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
துவக்க விழாவில், இந்துஸ்தான் அறக்கட்டளை செயலர் சரஸ்வதி கண்ணையன், மைக்கோப்ளூம்ஸ் மஷ்ரூமரி இயக்குநர் ரெபானாஷாஹுல், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
