/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தேசிய அளவிலான ஈட்டி எறிதல்: போட்டிக்கு மாணவர் தகுதி
/
தேசிய அளவிலான ஈட்டி எறிதல்: போட்டிக்கு மாணவர் தகுதி
தேசிய அளவிலான ஈட்டி எறிதல்: போட்டிக்கு மாணவர் தகுதி
தேசிய அளவிலான ஈட்டி எறிதல்: போட்டிக்கு மாணவர் தகுதி
PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM
அன்னூர்: மாநில அளவிலான போட்டியில் அன்னூர் மாணவர் இரண்டாம் இடம் பெற்று, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த இரண்டு மாதங்களாக குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. குறுமைய அளவில் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்றனர்.
கணேசபுரம், ஸ்ரீ பாரதி மெட்ரிக் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் கீர்த்திவாசன் மாநில அளவில் தஞ்சாவூரில் நடந்த தடகளப் போட்டியில் பங்கேற்றார். இதில் ஈட்டி எறிதல் போட்டியில், 53.60 மீ., தூரத்திற்கு ஈட்டி எறிந்து, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
சாதித்த மாணவருக்கு, பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.