தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/கண்டாங்கி சேலை கடைக்கு வருது: மீண்டும் தயாரிக்க அரசு திட்டம்

கண்டாங்கி சேலை கடைக்கு வருது: மீண்டும் தயாரிக்க அரசு திட்டம்

கண்டாங்கி சேலை கடைக்கு வருது: மீண்டும் தயாரிக்க அரசு திட்டம்


PUBLISHED ON : ஆக 02, 2015 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2015 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செட்டிநாடு, கூறைநாடு பாரம்பரிய சேலைகளை மீண்டும் உற்பத்தி செய்ய, கைத்தறித் துறை தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. காஞ்சிபுரம் கண்டாங்கி பட்டுச் சேலையை அடிப்படையாகக் கொண்டு, காரைக்குடி காட்டன் கண்டாங்கி சேலைகள் உருவாக்கப்பட்டது.

கூறைப் புடவை: இது, செட்டிநாட்டு சேலை எனவும் அழைக்கப்படுகிறது. 250 ஆண்டு கள் பழமையான இந்தரக சேலைகள் முதலில் செட்டிநாட்டவர், எண்ணத்தில் உதித்த வடிவத்தில் உருவாக்கப்பட்டது. இந்தரக சேலைகள் இரண்டு, 'பார்டர்' கொண்டதாகவும் நடுவில் கட்டடம் போட்டதாகவும் இருந்தது. காரைக்குடியில் மட்டுமே புகழ் வாய்ந்த இந்தச் சேலைகள், நகரத்தார் மூலம், பல நாடுகளில் பிரபலமானது. வேறு எந்த சேலையிலும் இல்லாத வகையில், 48 'இஞ்ச்' அகலம், 5.5 மீட்டர் நீளம் கொண்டது.

காரைக்குடி பகுதியில் இப்போது, உற்பத்தி செய்யப்படும் 60 எஸ்.சி., X 60 எஸ்.சி., ரக சேலைகளை ஆய்வு செய்த, என்.ஐ.எப்.டி., பேராசிரியர்கள், அவை கண்டாங்கி சேலையின் திரிபு என கூறுகின்றனர். 1920ம் ஆண்டு நெய்யப்பட்ட, 40எஸ் X 40எஸ் எண் நுால் ரகம் கொண்டு நெய்யப்பட்ட சேலையை வைத்து செய்த ஆய்வில் மூலம் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

செட்டிநாட்டு சேலை மிகப்பெரிய பார்டர் கொண்டது. பிரகாசமான மஸ்டட், மெரூன், கறுப்பு நிறங்கள்தான் இந்தச் சேலையில் அதிகம் பயன்படுத்தப்படும். செட்டிநாட்டு சேலைகள் என அழைக்கப்படும் கண்டாங்கி சேலைகள், உற்பத்தி நிறுத்தப்பட்டு, 10 ஆண்டுகள் ஆகின்றன.

மாயவரத்துக்கு அருகே உள்ளது ஓரூர் கோரநாடு. கூறைநாடு என்பதே, கோரநாடு என மருவியது. நெசவுக்கு பெயர்பெற்ற ஊர். முகூர்த்தப் புடவைகள் அங்கிருந்து வந்ததால், கோர நாட்டு புடவை என அழைத்தனர். பின், கூறைப் புடவை என மாறியது.

கூறைநாட்டுச் சேலைகள் சுத்தப் பட்டு, பருத்தி நுால் கலந்து நெய்யப்படுகிறது. சேலையின் எடையில், இரண்டு மடங்கு பட்டும், ஒரு பங்கு பருத்தி நுால் கலந்து, இந்தச் சேலைகள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில், 7, 8, 9 கஜம் சேலைகள் தயாரிக்கப்பட்டன. அதிக எடை இருந்ததால், திருமண விழாவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இந்தக் கூறைப் புடவை களும் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரு புடவைகளையும் மீண்டும் தயாரிக்கும் முயற்சியில், தமிழக அரசின் கைத்தறித் துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.



இரண்டு ரகம்: இதுபற்றி, துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:கூறைநாடு, செட்டிநாடு புடவைகள் உற்பத்தி, பல ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. மீண்டும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். அந்த ரக புடவைகளை நெய்பவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மூலம் இளம் நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், இரண்டு ரக புடவைகளும் தயாரிக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us