தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தேர்தல் விளம்பரங்கள் அனுமதிக்கு 'கட்டிங்' வசூலித்த அதிகாரி!

 தேர்தல் விளம்பரங்கள் அனுமதிக்கு 'கட்டிங்' வசூலித்த அதிகாரி!

 தேர்தல் விளம்பரங்கள் அனுமதிக்கு 'கட்டிங்' வசூலித்த அதிகாரி!


PUBLISHED ON : மே 02, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ஓ ட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், பஞ்சாயத்தை வச்சுக்கலாம்னு சொல்லிட்டாவ வே...'' என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''என்ன பிரச்னைங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கோவை மாவட்டத்துல, எல்லா தொகுதிகள்லயும் தி.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைச்சாங்கல்லா... தொண்டாமுத்துார் தொகுதியில், வாக்காளர்களுக்கு தலா, 1,000 ரூபாய் குடுத்தாவ வே...

''தொண்டாமுத்துார் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், வாக்காளர்களுக்கு தர வேண்டிய பணத்தில், 36 லட்சம் ரூபாயை தி.மு.க., நிர்வாகிகள் சிலர் சுருட்டிட்டாவ... இது சம்பந்தமா, தி.மு.க., அலுவலகத்தில் கடும் வாக்குவாதம் நடந்திருக்கு வே...

''இது மேலிடத்துக்கு போக, 'தேர்தல் முடிவு வந்ததும் இந்த பிரச்னையை பார்த்துக்கலாம்... இப்போதைக்கு ஆற போடுங்க'ன்னு சொல்லிட்டு... 'ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், 36 லட்சத்தை அமுக்கியவங்களுக்கு ஆப்பு காத்திருக்கு'ன்னு அந்த கட்சியினர் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''வேட்பாளர் செலவுக்கு பணம் குடுத்த வாக்காளர்கள் கதை தெரியுமா ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''ஆச்சரியமா இருக்கே... சீக்கிரம் சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''தஞ்சாவூர் தொகுதியில், அந்த மாவட்ட த.வெ.க., செயலரான விஜய் சரவணன் போட்டியிட்டார்... மற்ற கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த சூழல்ல, விஜய் சரவணன் தேர்தல் செலவுக்கு, வாக்காளர்கள் பணம் குடுத்திருக்கா ஓய்...

''அதாவது, அவர் ஓட்டு கேட்க போன இடங்கள்ல இருந்த கல்லுாரி மாணவ - மாணவியர், விஜய் ரசிகர்கள் பலரும், கவர்ல, 500 முதல், 2,000 ரூபாய் வரை வச்சு குடுத்திருக்காங்க... இப்படி, தினமும் 10 முதல் 20 பேர் வரை, அவருக்கு பணம் குடுத்திருக்கா... இதை பார்த்து, விஜய் சரவணன் நெகிழ்ந்து போயிட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''தேர்தல்ல பெரிய தொகையை சம்பாதிச்சிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சட்டசபை தேர்தல்ல, தேனி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும், தங்களுக்கு ஆதரவு கேட்டு, பத்திரிகைகள்ல விளம்பரம் வெளியிட்டாங்க... இந்த விளம்பரங்களை, கலெக்டர் அலுவலகத்தில் இருக்கிற ஊடக சான்றளிப்பு துறையிடம் காட்டி, அனுமதி வாங்கி தான் வெளியிடணும்...

''இப்படி அனுமதி கேட்டப்ப, அங்கிருந்த அதிகாரி ஒருத்தர், ஏதாவது உப்பு சப்பில்லாத காரணத்தை சொல்லி, விளம்பரத்தை வெளியிட முடியாதுங்கிற மாதிரி பேசி, கடைசியா 'கட்டிங்' வாங்கிட்டு அனுமதி தந்திருக்காருங்க...

''ஆண்டிபட்டி அ.தி.மு.க., வேட்பாளருக்கு விளம்பர அனுமதி வாங்க, அவரது ஆதரவாளரான, 'மாஜி' அரசு வக்கீல் ஒருத்தர் போயிருக்காரு... அவரிடம் அதிகாரி, '25,000 ரூபாயை வெட்டுங்க'ன்னு கேட்டிருக் காருங்க...

''அதிர்ச்சியான வக்கீல், 'என்கிட்டயே பணம் கேட்கிறீங்களா'ன்னு குரலை உயர்த்த, அதிகாரியோ, 'அண்ணே, இந்த பணம் எனக்கு மட்டுமில்லை... எனக்கு மேல இருக்கிற அதிகாரிகளுக்கும் பங்கு தரணும்'னு சொல்லி வசூல் பண்ணிட்டாருங்க... இந்த வகையில, சில லட்சம் ரூபாயை அதிகாரி அள்ளிட்டாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''முத்துகுமார் இங்கன உட்காரும்...'' என்றபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us