/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வாங்கிய வாகனங்களை வழங்காத அதிகாரிகள்!
/
வாங்கிய வாகனங்களை வழங்காத அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM

“விஷ் யு ஹேப்பி நியூஇயர்...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் சங்கமித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“இங்கிலீஷ்ல துாள் கிளப்புறீங்களே அண்ணாச்சி...” என, சிரித்தார் அந்தோணிசாமி.
“ஆங்கில புத்தாண்டுல்லா... இப்படித்தான் வாழ்த்தணும்னு என் பேரன் சொன்னான்...” என்ற அண்ணாச்சியே, “புதுசா டாஸ்மாக் கடையை திறந்துட்டாவவே...” என, மேட்டருக்குவந்தார்.
“எந்த ஊருல பா...” எனகேட்டார், அன்வர்பாய்.
“சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம்புழல் ஏரி அருகே, புதுசாஒரு டாஸ்மாக் கடையைதிறந்திருக்காவ... இங்கனஇருந்து, 150 மீட்டர்ல ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடையும், பாரும் இருக்கு வே...
“அப்படியிருந்தும், ரெண்டாவது கடையை திறந்துட்டாவ... இந்த கடையை திறக்க ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வாங்க, குறிப்பிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு சில லட்சங்கள் கைமாறிஇருக்கு... சீக்கிரமே இங்கன பாரையும் திறந்து,'குடி'மகன்களை குஷிப்படுத்த போறாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“ஆளை விட்டா போதும்னு இருக்காருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கிற கொலைகள், சட்டவிரோத மது விற்பனை, ஆளுங்கட்சியினரின் தொல்லையால மாவட்ட போலீஸ்உயர் அதிகாரி கடும் நெருக்கடியில் இருக்காருங்க... 'தினமும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துட்டே இருக்கே'ன்னு,சக அதிகாரிகளிடம் புலம்பியிருக்காருங்க...
“இதுக்கு முன்னாடி, சின்ன மாவட்டத்துலரிலாக்சா இருந்தவருக்கு,'சென்சிட்டிவ்'வான துாத்துக்குடி மாவட்டம்சரிப்பட்டு வரல... இதனால, தன்னோட தலைமை அதிகாரிகளிடம் இடமாறுதல் கேட்டிருக்காருங்க... அவங்களும், 'புத்தாண்டுபிறந்ததும், தலைநகருக்குஇடமாறுதல் தர்றோம்'னுஉறுதி தந்திருக்கிறதால, பல்லை கடிச்சுட்டு காத்திருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“வாகனங்கள் எல்லாம்வீணா போறது ஓய்...” என, கடைசி தகவலுக்குகட்டியம் கூறினார் குப்பண்ணா.
“எந்த துறையில பா...”என கேட்டார், அன்வர்பாய்.
“திருவாரூர் மாவட்டத்துல இருக்கறஊராட்சிகள்ல குப்பை அள்றதுக்கு, பேட்டரியில்இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் வாங்க முடிவு பண்ணா... இதன்படி, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த வாகனங்களை வாங்கினா ஓய்...
“ஆனாலும், ஊராட்சிகளுக்கு இவற்றை வழங்காம, மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துல குப்பை குவியல்களுக்கு மத்தியிலநிறுத்தி வச்சிருக்கா... இந்த வாகனங்களை வழங்க சொல்லி, நீடாமங்கலம் ஒன்றிய கவுன்சிலர்கள் எல்லாம், உண்ணாவிரதம் இருக்க போறதா முடிவெடுத்து, அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தா ஓய்...
“அதன் பிறகும், வாகனங்களை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல... சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மனுக்கள் மேல் மனுக்கள் அனுப்பியும் மாவட்ட நிர்வாகம் மவுனமாவே இருக்கு ஓய்...
“இதனால, பேட்டரி வாகனங்கள் எல்லாம் மழையிலும், வெயிலிலும் கிடந்து துருப்பிடிச்சு, காயலான் கடைக்கு போற மாதிரி இருக்கு... அதே நேரம், ஊராட்சி பகுதிகள்ல குப்பை அள்ளாம மலை போல குவிஞ்சு, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திண்டு இருக்கு ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
நாயருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிவிட்டு, அனைவரும்கிளம்பினர்.

