sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

72 பேரில் 2 பேருக்கு மட்டும் நேர்காணல்!

/

72 பேரில் 2 பேருக்கு மட்டும் நேர்காணல்!

72 பேரில் 2 பேருக்கு மட்டும் நேர்காணல்!

72 பேரில் 2 பேருக்கு மட்டும் நேர்காணல்!

4


PUBLISHED ON : மார் 15, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 15, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''மாசம் மும்மாரி பொழியுதோ... எல்லா அதிகாரிகளும் கேம்ப் போட்டாவன்னா, வாரி வாரி குடுப்போம்ன்னு நினைச்சிருப்பாவ போலிருக்கு... வெறுங்கையை மொழம் போடுற கதையா திரியிதோம்... யாரு காசு குடுப்பா...'' என்றபடியே கருப்பட்டி காபியை உறிஞ்சினார், பெரியசாமி அண்ணாச்சி.

''என்ன ஓய் திடீர்ன்னு புலம்பறீர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''நான் புலம்பலே வே... தாசில்தார்கள்லாம் புலம்புதாவ... ஒவ்வொரு மாசமும் நாலாவது புதன்கிழமை, ஏதாவது ஒரு கிராமத்துல கலெக்டர், ஆபீசருங்கல்லாம் தங்கி, வீடு வீடா போயி பிரச்னைகளைக் கேக்கணுமாம்... நிவர்த்தி செய்யணுமாம்... இவிங்களுக்கு தங்குற செலவு, சாப்பாடு, இத்யாதி, இத்யாதிக்கெல்லாம் தாசில்தார் தான் பர்சை தொறக்கணும்... ஒவ்வொரு தடவைக்கும் ௧ லட்சம் ரூவா செலவாகுது...

''தாசில்தாருக்கெல்லாம் ஏது காசு... ஸ்பான்சர்கள்கிட்டே வாங்கினா, அவங்க செய்யச் சொல்ற வேலையைச் செய்யணும்...

''தகவல்கள், 5ஜி வேகத்துல கைல கிடைக்கிற காலத்துல, உள்ளங்கையில தகவல் கிடைக்கிறா மாதிரி ஏற்பாடு செய்யிறதை விட்டுட்டு, வீடு வீடா ஏறு... கிராமம் கிராமமா போன்னு சொல்றதைக் கேட்டா சிரிக்கிறதா, அழுவறதான்னு தெரியலேன்னு தெரியலே வே... ரூல்ஸ் போடுறவங்க, அதுக்கு தக்கன காசையும் அனுப்பணும்லா...'' என்றார் அண்ணாச்சி.

''சென்னைக்கு பக்கத்துல இருந்தும், மாற்றாந்தாய் மனப்பான்மையோட நடத்தறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''சென்னையை ஒட்டி இருக்கற திருநின்றவூர் சிறப்பு நிலை பேரூராட்சியை, 2019ல நகராட்சியா தரம் உசத்தினா... அஞ்சு வருஷமாகியும், நகராட்சியில பெரிய அளவுல வளர்ச்சி பணிகள் நடக்கல ஓய்...

''எங்களுக்கு தெரியாம, வார்டுகள்ல அதிகாரிகள் வேலை செய்துட்டு, பில் போடுறதுல முறைகேடு பண்றான்னு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டறா...

''நகராட்சிக்கு, இரண்டு கமிஷனர்கள் நியமிக்கப்பட்டும், கவுன்சிலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு ஒத்து வராததால, 'பிரஷர்' குடுத்து அவாளை துாக்கி அடிச்சுட்டா ஓய்...

''அதுவும் இல்லாம, நகராட்சியில நிரந்தர செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர்களும் இல்லாததால, வளர்ச்சி பணிகளும் கிடப்புல கிடக்கறது... இப்பவும், திருத்தணி கமிஷனர் இதை கூடுதல் பொறுப்பா பார்த்துக்கறதால, பெரிய அளவுல வேலைகள் நடக்கல... 'நிரந்தர கமிஷனரை அரசு நியமிக்கணும்'னு அந்த பகுதி மக்கள் எல்லாம் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மொத்தம், 72 பேர் மனு போட்டதுல, ரெண்டே ரெண்டு பேரை மட்டும் நேர்காணலுக்கு அழைச்சிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''எந்த கட்சி விவகார முங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''அ.தி.மு.க.,வுல விருப்ப மனு போட்டவங்களுக்கு, பழனிசாமி உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், நேர்காணல் நடத்தினாங்களே... மதுரை தொகுதிக்கு 72 பேர் மனு போட்டிருந்தாங்க பா...

''இதுல, டாக்டர் சரவணன், கணேசன் என்பவரை மட்டும் அழைச்சு நேர்காணல் நடத்தியிருக்காங்க... இந்த ரெண்டு பேருமே, 'பசை'யான பார்ட்டி என்பதால தான், அவங்களை மட்டும் கூப்பிட்டு நேர்காணல் நடத்தியதா மதுரை அ.தி.மு.க.,வினர் சொல்றாங்க பா...

''இவங்கள்ல, டாக்டர் சரவணனுக்கு தான் மதுரை சீட்னு உறுதி குடுத்துட்டாங்களாம்... அவரும், போட்டிக்கான ஏற்பாடுகள்ல களம் இறங்கிட்டாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

பேச்சு முடிய பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us