தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/திருவள்ளூரில் புதிய பூங்கா திறப்பு

திருவள்ளூரில் புதிய பூங்கா திறப்பு

திருவள்ளூரில் புதிய பூங்கா திறப்பு


PUBLISHED ON : பிப் 20, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் புதிய பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சி, 24வது வார்டு பாரதியார் நகரில், 'நமக்கு நாமே திட்டம் 2022 - 23' கீழ் பெடரல் வங்கி சமூக பங்களிப்பு தொகை 8 லட்சம் மற்றும் நகராட்சி நிதி 16 லட்சம் என மொத்தம் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.

நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிச்சந்திரன், கமிஷனர் சுபாஷினி முன்னிலை வகித்தனர்.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திருவள்ளூர் ராஜேந்திரன், திருத்தணி சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

lதிருவள்ளூர் ஒன்றியம், புட்லுார், அரண்வாயல்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், தலா 28 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதையடுத்து, இவ்விரண்டு பள்ளிகளையும், பூந்தமல்லி தி.மு.க.,- எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ரவி, மாவட்ட கல்வி அலுவலர் மோகனா, வட்டார கல்வி அலுவலர் வீரராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us