/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
உத்திரமேரூர் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
/
உத்திரமேரூர் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
உத்திரமேரூர் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
உத்திரமேரூர் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
PUBLISHED ON : மார் 16, 2024 12:00 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளக்காடி, எஸ்.மாம்பாக்கம், விச்சூர், எம்.மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தொடக்க பள்ளிக்கான சத்துணவு கூடங்கள் புதிதாக கட்டப்பட்டன.
இதேபோன்று, எம்.மாம்பாக்கம், அரும்புலியூர், படூர் ஆகிய கிராமங்களில் கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக, ஜே.ஜே.எம்., திட்டத்தின் கீழ், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன.
புல்லம்பாக்கம் ஊராட்சியில், பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா திட்டத்தில், 18 லட்சம் ரூபாய் செலவில் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடங்களுக்கான பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இதில், சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

