sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மண் கடத்தல் புகார் தந்தவர்களை மிரட்டும் மாமூல் போலீசார்!

/

மண் கடத்தல் புகார் தந்தவர்களை மிரட்டும் மாமூல் போலீசார்!

மண் கடத்தல் புகார் தந்தவர்களை மிரட்டும் மாமூல் போலீசார்!

மண் கடத்தல் புகார் தந்தவர்களை மிரட்டும் மாமூல் போலீசார்!

4


PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பில்டர் காபியை வாங்கியபடியே, ''தற்காலிகமா தப்பிச்சிட்டாங்க ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''யாருங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''திருச்சி மாவட்ட உளவுத்துறை பெண் அதிகாரியும், ஏட்டுவும் சமுதாய ரீதியிலான பாசம் கொண்டவா... இவா, அ.தி.மு.க.,வுக்கு சாதகமா செயல்படறதா, நாம ஏற்கனவே பேசியிருந்தோம் ஓய்...

''இது சம்பந்தமா, மாவட்ட உளவு போலீசார் எல்லாரையும், உயர் அதிகாரிகள் சமீபத்துல சென்னைக்கு அழைச்சு விசாரணை நடத்தியிருக்கா... இதுல, ஏட்டு மீதான குற்றச்சாட்டுகள் உண்மைன்னு தெரியவர, அவரை ரயில்வே துறைக்கு துாக்கி அடிச்சுட்டா ஓய்...

''இதுக்கு இடையில, சென்னையில இருந்து விசாரணைக்கு அழைப்பு வந்ததுமே, உஷாரான பெண் அதிகாரி, 'விசாரணை நடத்துற உயர் அதிகாரியும் என் சமுதாயம் தான்... அதனால, நீங்க அங்க என்ன சொன்னாலும், என் காதுக்கு வந்துடும்'னு உளவு போலீசாரை மிரட்டி அனுப்பிட்டாங்க...

''இதனால, பயந்து போன அவங்க, பெண் அதிகாரி மீதான புகார்கள் பத்தி தெரியாதுன்னு மழுப்பிட்டு வந்துட்டதால, தற்காலிகமா பெண் அதிகாரி தப்பிச்சுட்டாங்க...

''அதே நேரம், 'ரிலீவ் ஆர்டர்' வாங்க வந்த ஏட்டு, தன்னை மாட்டிவிட்ட சக போலீசாரை கெட்ட வார்த்தைகளால சரமாரியா திட்டிட்டு போயிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, ''அச்சுதன், உமா மேடம்கிட்ட பேசிட்டேன்... டீடெய்லா சாயந்தரமா பேசுறேன்...'' என, வைத்தபடியே, ''தி.மு.க., பீடத்தையே இடிச்சுட்டாங்க...'' என்றார்.

''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''தென்காசி மாவட்டம், கே.டி.சி., நகர்ல 20 சென்ட் நிலத்தை, 2021ல தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் சிவபத்மநாபன், கட்சிக்கு வாங்கி இருந்தாருங்க... இந்த நிலத்துல, 100 அடி உயரத்துல கொடி கம்பம் அமைச்சு, ஜூன் 3ம் தேதி, துணை முதல்வர் உதயநிதியை வச்சு கொடியேத்த ஏற்பாடு பண்ணிட்டு இருந்தாருங்க...

''ஆனா, இப்ப பதவியில் இருக்கும் மாவட்ட முக்கிய புள்ளியால இதை ஜீரணிக்க முடியல... அவரது ஆதரவாளர்கள் சிலர், கொடி கம்பத்தின் பீடத்தை, பொக்லைன் இயந்திரம் மூலமா இடிச்சு தள்ளிட்டாங்க...

''இதனால, '200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்ற முதல்வரின் கனவுக்கு, இவங்க கோஷ்டிப்பூசல் வேட்டு வச்சிடும்'னு கட்சி தொண்டர்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''புகார் தர்றவங்களையே மிரட்டுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, கூடமலை பகுதிகள்ல உள்ள நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள்ல, கிராவல் மண், செம்மண்ணை ராத்திரி நேரங்கள்ல, டிப்பர் லாரிகள்ல கடத்திட்டு போறாவ...

''இரவு ரோந்து பணியில் இருக்கும் உள்ளூர் போலீசாரை, 'கவனிச்சு' இந்த கடத்தல் நடக்கு வே...

''போன வாரம், தம்மம்பட்டி பகுதியில் மண் கடத்துறதா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சிலர் புகார் குடுத்திருக்காவ... அவங்க நம்பருக்கு பேசிய ரோந்து போலீசார், 'இந்த நேரத்தில் அங்க உங்களுக்கு என்ன வேலை'ன்னு மிரட்டும் தொனியில கேள்வி கேட்டிருக்காவ வே...

''இன்னும் சில போலீசார், கடத்தல் கும்பலுக்கு போன் போட்டு, 'நாங்க இந்த நேரத்துல இந்த இடத்துல இருப்போம்'னு சொல்லிடுதாவ... இதனால, மண் கடத்தல் கும்பல் அந்த வழியை தவிர்த்துட்டு, கடத்தலை கனஜோரா பண்ணுது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us