sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தாது மணல் கொள்ளை புகார் சி.பி.ஐ., விசாரணை துவக்கம்

தாது மணல் கொள்ளை புகார் சி.பி.ஐ., விசாரணை துவக்கம்

தாது மணல் கொள்ளை புகார் சி.பி.ஐ., விசாரணை துவக்கம்


PUBLISHED ON : பிப் 21, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 21, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:தாது மணல் கொள்ளை குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

கடலோர மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் தாது மணல் படிமங்கள் உள்ளன. இவற்றில், கதிரியக்கத் தன்மை உடைய கனிமங்கள், விலை உயர்ந்த தாது உப்புக்கள் உள்ளன.

இதையறிந்த, 'வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், பீச் மினரல்ஸ், இண்டஸ்டிரியல் மினரல்ஸ்' உட்பட, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தன.

இதனால், அரசுக்கு 5,832 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர்கள் விசாரணையை துவங்கி உள்ளனர்.

சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:

தாது மணல் கொள்ளையடிக்கப்பட்ட இடங்கள், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் உதவியுடன் துல்லியமாக அளவீடு செய்யப்படும். கொள்ளை குறித்து ஏராளமான ஆவணங்களை திரட்ட வேண்டி உள்ளது.

அவற்றின் அடிப்படையில், சோதனை நடத்தப்படும். பின், இதில் தொடர்புடைய நபர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us