/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'ரயில், பேருந்துகளில் ஓய்வூதியர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வேண்டும்'

PUBLISHED ON : டிச 15, 2025 05:29 AM

திருத்தணி: 'ஓய்வூதியர்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு, 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க வேண்டும்' என, திருத்தணியில் நடந்த பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருத்தணி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில், நேற்று பேரவை மற்றும் ஓய்வூதியர் தினவிழா கூட்டம், பழைய தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடந்தது. திருத்தணி கிளை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, சங்கத்தின் வரவு - செலவு கணக்குகள் மற்றும் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
மேலும், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப்படியை, 300 - 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை, 50,000ல் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
ஓய்வூதியர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க வேண்டும் உட்பட மொத்தம், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.