/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'யாருமே பெண் தர மாட்றாங்க' கலெக்டரிடம் குமுறிய மக்கள்
/
'யாருமே பெண் தர மாட்றாங்க' கலெக்டரிடம் குமுறிய மக்கள்
'யாருமே பெண் தர மாட்றாங்க' கலெக்டரிடம் குமுறிய மக்கள்
'யாருமே பெண் தர மாட்றாங்க' கலெக்டரிடம் குமுறிய மக்கள்
PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், குண்டாண்டார்கோவில் அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் எங்கள் ஊரில் தார் சாலை போடவில்லை. பள்ளி மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
எங்கள் ஊரில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனால், எங்கள் ஊர் வாலிபர்களுக்கு பிற பகுதியில் இருந்து பெண் கொடுக்க மறுக்கின்றனர். எனவே, ஊரில் திருமணமாகாமல் இளைஞர்கள் பலர் உள்ளனர். திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல எங்கள் கிராமம் உள்ளது.
உரிய நடவடிக்கை எடுத்து கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். சாலை, பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.