/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்
/
காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்
PUBLISHED ON : டிச 26, 2025 05:18 AM

உளுந்துார்பேட்டை: குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த புத்தமங்கலத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் குடிநீர் பைப் லைன் உடைந்து சேதமடைந்தது.
இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் விவசாய நிலங்களில் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இதனால் ஆவேசமடைந்த மக்கள் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை 9:00 மணியளவில் எலவனாசூர்கோட்டை-ஆசனுார் சாலையில், காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

