தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ போலீஸ் அதிகாரிகளின் ' சிண்டிகேட் ' மாமூல் வசூல்!

 போலீஸ் அதிகாரிகளின் ' சிண்டிகேட் ' மாமூல் வசூல்!

 போலீஸ் அதிகாரிகளின் ' சிண்டிகேட் ' மாமூல் வசூல்!

1


PUBLISHED ON : மே 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“அ .தி.மு.க., ஆட்சியில் இருந்தவருக்கே மறுபடியும் வாய்ப்பு தந்திருக்காரு பா...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.

“தமிழக அரசின் புதிய அட்வகேட் ஜெனரலா, விஜய் நாராயண் நியமிக்கப்பட்டிருக்காரே... இவர், 2017 - 21ல் நடந்த அ.தி.மு.க., ஆட்சியிலும் இதே பதவியில் இருந்தாரு பா...

“இவர், விஜய்க்காக பல வழக்குகள்ல ஆஜராகியிருக்காரு... விஜய் வாங்கிய சொகுசு கார்களுக்கு வரி கட்டாத வழக்கை விசாரிச்ச ஐகோர்ட், விஜய்க்கு எதிரா சில கருத்துகளை பதிவு செஞ்சது பா...

“அந்த வழக்கில் விஜய் நாராயண் எடுத்து வச்ச வாதங்களுக்கு பிறகு, விஜய் குறித்த கருத்துகளை ஐகோர்ட் வாபஸ் வாங்குச்சு... அப்பவே, விஜய் நாராயண் மீது விஜய்க்கு நல்ல மதிப்பு உருவாகிடுச்சு பா...

“போதாக்குறைக்கு, விஜய் படிச்ச லயோலா கல்லுாரியில் தான் விஜய் நாராயணும் படிச்சிருக்காரு... இதனாலயே, அவருக்கு பதவி கிடைச்சிருக்குது பா...” என்றார், அன்வர்பாய்.

“ராஜினாமாவை தடுத்து வச்சிருக்கா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காரா, தி.மு.க., முன்னாள் அமைச்சர் தியாகராஜனின் தாயார் ருக்மணி இருக்காங்க... இவங்க தலைமையிலான அறங்காவலர் குழு, ரெண்டாவது முறையா இந்த பதவியில் இருக்கு ஓய்...

“வர்ற செப்., 17ல் கோவில்ல கும்பாபிஷேகம் நடக்க இருக்கறதால, அறங்காவலர் குழு ஏற்பாட்டுல பணிகள் நடந்துண்டு இருக்கு... ஆட்சி மாற்றத்தால, ருக்மணி தன் பதவியை ராஜினாமா பண்ண முடிவு பண்ணியிருக்காங்க ஓய்...

“ஆனா, அறநிலையத் துறைக்கான புது அமைச்சர் இன்னும் பொறுப்பு ஏத்துக்கல... 'கோவில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் கையெழுத்து வாங்குறதுல நிர்வாக சிக்கல்கள் வரும்கறதால, அமைச்சர் பொறுப்பேற்கும் வரை, பதவியில் தொடருங்கோ'ன்னு கோவில் நிர்வாகிகள் சொல்லியிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.

“ஆட்சி மாறியும், காட்சி மாறல வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

“எந்த ஊர் விவகாரம் பா...” என கேட்டார், அன்வர்பாய்.

“திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல்ல சில மாசங்களுக்கு முன்னாடி வரை போலீஸ் இன்ஸ்பெக்டரா இருந்தவர், ஓவர் வசூல்ல இறங்கி, கெட்ட பெயரை சம்பாதிச்சாரு... அப்புறமா, தி.மு.க., ஆதரவுல பழனி டவுனுக்கு மாறி போயிட்டாரு வே...

“அடுத்து வந்த அதிகாரி யும், உதவி அதிகாரிகளா வந்த இருவரும் சேர்ந்து, பழையவரே தேவலாம்கிற அளவுக்கு வசூல்ல புகுந்து விளையாடுதாவ... இந்த மூணு பேருமே, தங்களுக்குள்ள, 'சிண்டிகேட்' போட்டுக்கிட்டு வசூல் பண்ணுதாவ வே...

“புகார் தர்றவங்க, எதிர் தரப்புன்னு ரெண்டு பேரிடமும் குறைஞ்சது, 10,000 ரூபாயையாவது கறந்துடுதாவ... பிரபலமான சுற்றுலா தலமா இருக்கிறதால, விடுதிகள்ல அடிக்கடி, 'ரெய்டு' நடத்துறது, போதை பொருட்கள் விற்கிறவங்களிடம் மாமூல் வாங்குறதுன்னு இருக்காவ வே...

“பார்கள்ல ரெய்டு நடத்தி, மது பாட்டில் களை பறிமுதல் பண்ணி, சட்டவிரோதமா மது விற்கிற கும்பலிடம் வித்து பணம் வாங்கிடுதாவ... இவங்களை பத்தி லஞ்ச ஒழிப்பு துறைக்கு நிறைய புகார்கள் போயும் நடவடிக்கை இல்ல வே...” என முடித்தார், அண்ணாச்சி.

“வசந்த்குமார், ஜெய்கணேஷ், அபினேஷ் எல்லாம் வரா... உட்கார இடம் கொடுங்கோ ஓய்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us