sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 நகை கடையிடம் தங்கமாக லஞ்சம் வாங்கிய போலீசார்!

/

 நகை கடையிடம் தங்கமாக லஞ்சம் வாங்கிய போலீசார்!

 நகை கடையிடம் தங்கமாக லஞ்சம் வாங்கிய போலீசார்!

 நகை கடையிடம் தங்கமாக லஞ்சம் வாங்கிய போலீசார்!

1


PUBLISHED ON : ஜன 12, 2026 02:14 AM

Google News

PUBLISHED ON : ஜன 12, 2026 02:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''க ட்சி நிதி தரலன்னா, கட்டடம் கட்ட முடியாது ஓய்...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் குப்பண்ணா.

''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''கோவை மாநகராட்சியில், புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க, ஆளுங்கட்சிக்கு நிதி வசூலிக்கறா... இதுக்காகவே, துறையின் முக்கிய புள்ளி சார்பில், ஒருத்தரை நியமிச்சிருக்கா ஓய்...

''அதே மாதிரி, சொத்து வரி நிர்ணயம் பண்ணவும், காலியிட வரி நிர்ணய வசூலுக்கும், இன்னொருத்தரை நியமிச்சிருக்கா... வணிக கட்டடமா இருந்தா, சதுர அடிக்கு, 20 ரூபாய், குடியிருப்பா இருந்தா, சதுர அடிக்கு, 10 ரூபாய், காலியிட வரி நிர்ணயத்துக்கு சென்ட்டுக்கு, 1,000 ரூபாய்னு, இந்த ரெண்டு பேரும் கறாரா கேட்டு வாங்கிடறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ரவி, கண்ணன் இப்படி உட்காருங்க...'' என, நண்பர்களுக்கு இடம் தந்த அந்தோணிசாமியே, ''பராமரிப்பு பணியால குழப்பத்துல இருக்காங்க...'' என்றார்.

''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மாணவியர் விடுதி செயல்படுது... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான், இந்த விடுதியில பராமரிப்பு பணிகளை செஞ்சாங்க...

''ஆனா, எந்த பணிகளையும் உருப்படியா செய்யல... வெளிப்புறத்துல மட்டும் பளிச்சுன்னு பெயின்ட் அடிச்சிட்டு, உள்ள ஏனோ தானோன்னு பணிகளை செஞ்சி, பணத்தை அமுக்கிட்டாங்க...

''இப்ப, அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்பில் சீரமைப்பு பணிகளை செய்ய, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க... நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகள்ல செயல்படும் இந்த மாதிரி விடுதிகளை, அந்த துறை தான் பராமரிக்கணும்...

''ஆனா, 'ஒன்றிய நிதியில் ஏன் விடுதியை பராமரிக்க சொல்றாங்க... இந்த செலவை எந்த கணக்குல எழுதுறது'ன்னு தெரியாம, ஒன்றிய அதிகாரிகள் குழப்பத்துல இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''நகையா லஞ்சம் வாங்கியிருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''சென்னையில இருக்கும் பிரபல நகைக்கடைக்கு ஊழியர்கள் கார்ல எடுத்துட்டு போன, 10 கிலோ தங்க நகைகளை, போன வருஷம் செப்., 13ல், திருச்சி மாவட்டம், சமயபுரம் பக்கத்துல சிலர் கொள்ளை அடிச்சாங்களே... இது சம்பந்தமா, தனிப்படை போலீசார் பல மாநிலங்களுக்கும் போய், 12 குற்றவாளிகளை கைது பண்ணி, 9.5 கிலோ நகைகளை மீட்டாங்க பா...

''இந்த தனிப்படையில் இடம்பெற்ற டி.எஸ்.பி., துவங்கி கான்ஸ்டபிள் வரை, நகைக்கடையிடம் தனித்தனியா தங்கச் செயின், மோதிரம், 30,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை வாங்கியிருக்காங்க... அப்புறமும், சமயபுரம் போலீஸ் அதிகாரி ஒருத்தரும், தனிப்படை ஏட்டு ஒருத்தரும், 'இன்னும் பலருக்கு கொடுக்கணும்'னு சொல்லி நகைகள் கேட்டிருக்காங்க பா...

''இதனால, நகை கடைக்காரங்க நொந்தே போயிட்டாங்க... இந்த இருவர் கூட்டணி, சமயபுரம் நால்ரோட்டில், 'லைசென்ஸ்' இல்லாம, 'பார்' நடத்த அனுமதி குடுத்து, மாசம், 40,000 ரூபாய் வாங்குறாங்க... இவங்க மேல, லஞ்ச ஒழிப்பு துறைக்கு நிறைய புகார்கள் போகவே, பயந்து போன சமயபுரம் அதிகாரி, இப்ப, 'மெடிக்கல் லீவ்'ல போயிட்டாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''ரகுராமன், அன்பரசன் வர்றாங்க... சுக்கு காபி குடுங்க நாயரே...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us