/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாநகர போக்குவரத்து சங்கத்திற்கு தேர்தல் பேனர் வைத்து பணிமனையில் அடாவடி

PUBLISHED ON : ஏப் 25, 2025 12:00 AM

கே.கே., நகர், மாநகர போக்குவரத்து கழக பணிமனை, கே.கே., நகர் அண்ணா பிரதான சாலையில், பேருந்து நிலையத்துடன் செயல்படுகிறது.
இங்கிருந்து, சென்னையின் பல பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கே.கே., நகர் பணிமனையில், மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்காக, பணிமனை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தி.மு.க., சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பறையை பூட்டி, அதன் மூன் சாரம் கட்டி பேனர் வைத்துள்ளனர். தவிர, மாதாந்திர பயணச்சீட்டு அலுவலகம், பாலுாட்டும் அறையை மறைத்து பேனர் வைத்துள்ளனர்.
இதனால், பணிமனைக்கு வரும் மாற்றுத்திறனாளி பயணியர் கழிப்பறை செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்; மற்றவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.
பயணியருக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற, மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.