உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 10, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகளாலும், அலுவலர்களின் பணி சுமையாலும் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அதற்கு மாற்றாக வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்களின் மனுக்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு வழங்கும் பெட்டி வைக்கப்பட்டது. அதன் மூலம் அவர்களது மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தளர்வு செய்யப்பட்டது.
அதைதொடர்ந்து செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம் போல் நாளை காலை 10:00 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் மாலதி ஹெலனிடம் அளித்து பயன் பெறலாம்.
