/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு மருத்துவமனையில் மாறிய சடலம் உறவினர் முற்றுகையிட்டு வாக்குவாதம்
/
அரசு மருத்துவமனையில் மாறிய சடலம் உறவினர் முற்றுகையிட்டு வாக்குவாதம்
அரசு மருத்துவமனையில் மாறிய சடலம் உறவினர் முற்றுகையிட்டு வாக்குவாதம்
அரசு மருத்துவமனையில் மாறிய சடலம் உறவினர் முற்றுகையிட்டு வாக்குவாதம்
PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சடலம் மாறி வழங்கப்பட்டதால், உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்டிபள்ளியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; கூலித்தொழிலாளி. இவர், வயிற்றுவலியால் இரண்டு நாட்களுக்கு முன் பூச்சி மருந்து குடித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று காலை உறவினர்கள், அவரது உடலை பெற வந்த போது, வேறு ஒருவரின் உடலை பிணவறை ஊழியர்கள் ஒப்படைத்தனர். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஊழியர்களிடம் கேட்டபோது, சரியான தகவல் கிடைக்கவில்லை. ஆத்திரமடைந்தவர்கள், பிணவறை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், மூன்று நாட்களுக்கு முன், பீஹார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ்மாஞ்சி, 55, என்பவர், வெங்கல் பகுதியில் சாலை பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவர் உடல்நலக் குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்க வந்தபோது உயிரிழந்தார். அவருடன் பணிபுரிந்தவர்கள், நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்குப் பின், அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெற்றுக் கொள்ள வந்தனர்.
அப்போது, இறந்த மனோஜ்மாஞ்சியின் உடலுக்கு பதிலாக, ராஜேந்திரன் உடலை பெற்றுச் சென்றதாக தெரிய வந்தது. உடனே போலீசார், பீஹாருக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவரின் உடலை திரும்ப கொண்டு வருமாறு தகவல் அளித்தனர். இதையடுத்து, அவரது உடல், திருவள்ளூருக்கு நாளை வந்து விடும் என, தெரிவித்தனர்.
இதனால், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.