/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
திருப்போரூர் சுப்ராயல் நகரில் புதிய சாலை அமைக்க கோரிக்கை
/
திருப்போரூர் சுப்ராயல் நகரில் புதிய சாலை அமைக்க கோரிக்கை
திருப்போரூர் சுப்ராயல் நகரில் புதிய சாலை அமைக்க கோரிக்கை
திருப்போரூர் சுப்ராயல் நகரில் புதிய சாலை அமைக்க கோரிக்கை
PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி சுப்ராயல் நகரில் புதிய சாலை அமைக்க வேண்டுமென, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சி, ஏழாவது வார்டு, சுப்ராயல் நகரில், 10க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த தெரு சாலை, திருப்போரூர்- - நெம்மேலி சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையாக உள்ளது.
கடுமையாக சேதம் அடைந்துள்ள இந்த சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள ன. புதிய சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, இப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, மழைநீர் வடிகால்வாய் மட்டும் அமைக்கப்பட்டது. ஆனால், சாலை அமைக்கப்படவில்லை. சாலை அமைப்பதற்காக, 'பொக்லைன்' இயந்திரத்தால் சாலையை கிளறிவிட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், சாலை சகதியாக மாறியுள்ளது.
இதில், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல முடியாத நிலையும் உள்ளது.
எனவே, திருப்போரூர் பேரூராட்சி சுப்ராயல் நகரில் புதிய சாலை அமைக்க வேண்டுமென, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

