/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் மருத்துவ காப்பீடின்றி தவிப்பு 5 லட்சம் பேருக்கு சிக்கல்

PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM
சிவகங்கை:தமிழகத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லாததால் 5 லட்சம் பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கின்றனர். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் மாதத்திற்கு ரூ.300 வீதம் காப்பீடு திட்டத்திற்காக பிடித்தம் செய்கின்றனர்.
காப்பீடு அட்டை மூலம் அவர்கள் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். ஆனால், சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 5 லட்சம் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டமும் இல்லை.
மாதம் ரூ.300 பிடித்தம் செய்து காப்பீடு வழங்கும் திட்டத்திலும் இவர்களை சேர்க்கவில்லை. ஓய்வுக்கு பின் மாதம் கருணை தொகையாக அரசு தலா ரூ.2,000 மட்டுமே வழங்குகிறது.
தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பி.பாண்டி கூறியதாவது: எங்களையும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்குமாறு மருத்துவ காப்பீடு திட்ட இயக்குனர், அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆனால் கருணை தொகை வழங்குவதால் சேர்க்க முடியாது என்கின்றனர். இதற்காக தான் குறைந்த பட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7850 வழங்கி அதிலிருந்து காப்பீடு திட்டத்திற்கென மாதம் ரூ.300 பிடித்தால், ஓய்வு பெற்ற எங்களுக்கும்மருத்துவ சிகிச்சை கிடைக்கும், என்றார்.