/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வருவாய் அதிகாரிகள் காட்டில் ' கரன்சி ' மழை!
/
வருவாய் அதிகாரிகள் காட்டில் ' கரன்சி ' மழை!
PUBLISHED ON : நவ 13, 2024 12:00 AM

இஞ்சி டீயை பருகியபடியே, “நெல்லைக்கு துாக்கி அடிச்சுட்டாங்க...”என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாரை ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துல, புல்லாங்குழல் வாசிக்கிற கடவுள் பெயர் கொண்டவர் முக்கிய அதிகாரியா இருந்தாருங்க...
''இவர், கொரோனா காலத்துல, பென்னாகரத்துல பணியில இருந்தப்ப, பஞ்சாயத்துகளுக்கு பிளீச்சிங் பவுடர் வாங்காமலே வாங்கியதாகணக்கு காட்டி, பல லட்சத்தை சுருட்டிட்டாருங்க... இதுக்காக, இவர் மேல லஞ்ச ஒழிப்புபோலீசார் வழக்கே பதிவுபண்ணியிருக்காங்க...
“பாப்பிரெட்டிப்பட்டியிலும், தனக்கு மாதா மாதம் ஒரு தொகையை கப்பமா கட்டணும்னு ஊராட்சி செயலர்களுக்குநெருக்கடி குடுத்தாருங்க...இது போக, இன்னும் பல புகார்கள் இவர் மீது வரிசை கட்டவே, சமீபத்துல இவரை நெல்லைக்கு துாக்கி அடிச்சுட்டாங்க...
“இவரது இடமாறுதலைரத்து பண்ண, உள்ளூர் வி.சி., கட்சி நிர்வாகிகள்சிபாரிசு செய்தும், தி.மு.க.,வினர் ஏத்துக்க மறுத்துட்டாங்க... இவரதுஇடமாற்றத்தால, ஊராட்சிசெயலர்கள், தலைவர்கள்எல்லாம் மகிழ்ச்சியா இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“சில்மிஷ பிரமுகரை விட்டுட்டாங்க பா...” என,அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...
“திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் தி.மு.க., பிரமுகர் ஒருத்தர், போனமாசம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு நடந்து போயிட்டுஇருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்துல ஈடுபட்டிருக்காரு... அந்தபெண்ணோட உறவினர்கள், தி.மு.க., பிரமுகரை அடிக்க திரண்டு வந்துட்டாங்க பா...
“அந்த பிரமுகர், தி.மு.க.,இளைஞரணி நிர்வாகிஅலுவலகத்துல வேலைசெய்றதால, போலீசார் வந்து, 'பஞ்சாயத்து' பேசினாங்க... ஆளுங்கட்சியினர் அழுத்தத்தால,இளம் பெண் தரப்பும் புகார் தரல பா...
“தி.மு.க., பிரமுகர் சில்மிஷத்துல ஈடுபட்டதற்கான, 'சிசிடிவி' வீடியோவே இருக்கு... அப்படி இருந்தும், ஆளுங்கட்சி ஆளுங்கிறதால, விஷயத்தை கமுக்கமா மறைச்சுட்டாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“தியாகு, இங்கன உட்காரும்... உம்ம சேக்காளி பாலு எங்க வே...” என, நண்பரிடம்விசாரித்த பெரியசாமி அண்ணாச்சியே, “வருவாய்அதிகாரிகள் காட்டுல பணமழை கொட்டுதுல்லா...” என்றார்.
“எந்த ஊர்ல ஓய்...” எனகேட்டார், குப்பண்ணா.
“திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவுல மூணு கிராமஉதவியாளர்கள், ராத்திரிநேரங்கள்ல பம்பரமா சுத்தி வந்து, திருட்டு மணல் லாரிகளை பிடிக்காவ... மாமூலை கறந்துட்டு, லாரிகளை விட்டுடுதாவ வே...
“இந்த பணத்தை, தாலுகா மற்றும் கோட்டவருவாய் அதிகாரிகளிடம்குடுத்து, அவங்க தர்ற கமிஷனை வாங்கிக்கிடுதாவ... இப்படி கிடைச்ச கமிஷன் பணத்துல ஒரு உதவியாளர், 'தார்' ஜீப்பே வாங்கியிருக்காருன்னா, அதிகாரிகளுக்கு எவ்வளவு கிடைக்கும்னு கணக்கு போட்டு பாருங்க வே...
“தாலுகா அதிகாரியின் ஒரு வருஷ பதவிக்காலம்முடிஞ்சு, ரெண்டு மாசமாகியும் வேற இடத்துக்குபோகலை... அதுக்கு காரணம், கோட்ட அதிகாரியின் தயவு தான்வே... 'வடகிழக்கு பருவமழை சீசன் முடியுற வரைக்கும், அவர் இங்கனயே இருக்கட்டும்'னு உயர் அதிகாரிகளிடம் சொல்லிட்டாரு...இருவர் அணியும் வசூல்லபுகுந்து விளையாடுது வே...” என முடித்தார், அண்ணாச்சி.
மழை துாறல் போட துவங்க, பெரியவர்கள், 'மளமள'வென இடத்தைகாலி செய்தனர்.

