/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழையால் சேதம்: விவசாயிகள் கவலை
/
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழையால் சேதம்: விவசாயிகள் கவலை
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழையால் சேதம்: விவசாயிகள் கவலை
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழையால் சேதம்: விவசாயிகள் கவலை
PUBLISHED ON : ஜன 26, 2026 05:16 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நெற்பயிரிர்கள் பிரதானமாக பயிரிடப்பட்டு வருகிறது. ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் சம்பா அறுவடை பணிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருவெண்ணெய்நல்லுார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏமப்பூர், சிறுவானுார், ஏனாதிமங்கலம், பெரியசெவலை, சரவணம்பாக்கம், கொத்தனுார், அரசூர், இருவேல்பட்டு, பேரங்கியூர், ஆனத்துார், டி.புதுப்பாளையம், மணக்குப்பம், ஆமூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் நடவு செய்திருந்தனர்.
தற்போது, இப்பகுதிகளில் கதிர் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 3 தினகளாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல கிராமங்களில் அறுவடைக்கு தயராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்துள்ளன.
மேலும், வயல்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மகசூல் குறையும் என இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து திருவெண்ணெய்நல்லுார் பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், ' நெற்கதிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. மழை தொடர்சியாக பெய்து வருவதால் கதிர்கள் படிப்படியாக சாய்ந்துள்ளது.
இதனால் இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய முடியாது, மேலும் தொடர்சியாக மழை பெய்தால் நெல்மணிகள் கொட்டிவிடும்.
இம்முறை மகசூல் பாதிக்கும் நிலை உள்ளதால், வருவாய் இழப்பு ஏற்படும்' என கவலையுடன் தெரிவித்தார்.

