/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.2.96 கோடி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
ரூ.2.96 கோடி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் சைபர் குற்றப்பிரிவு வாயிலாக, பல்வேறு வகையில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள், '1930' என்ற எண்ணிலும், சைபர் கிரைம் காவல் நிலையங்களிலும் புகார் அளித்து வருகின்றனர்.
சைபர் க்ரைம் தொடர்பாக, ஜூன் மாதம் மட்டும், 146 புகார்கள் பெறப்பட்டு, 2.96 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பணத்தை, அதற்குரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை, 15.30 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.