PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM
கானல் நீர் தோன்றுவது எப்படி
வெயில் அதிகமாக உள்ள காலத்தில் சாலைகளில் செல்லும் போது துாரத்தில் தண்ணீர் இருப்பதை போல தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் தண்ணீர் இருக்காது. இது 'கானல் நீர்' என அழைக்கப்படுகிறது. வெயில் காலத்தில் தரையின் அருகே வெப்பம் அதிகமாகி காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும். அதே சமயம் மேலே உள்ள காற்று ஒப்பீட்டளவில் வெப்பம் குறைந்து அடர்த்தி கூடுதலாக இருக்கும். எனவே இந்தக் காற்று அடுக்குகள் வழியே ஒளிக்கதிர்கள் வரும்போது அவை வளைந்து கானல் நீர் போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தகவல் சுரங்கம்
தேசிய 'ஸ்டார்ட் அப்' தினம்
புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மாறி உள்ளன. இந்தியாவின் 100வது ஆண்டு சுதந்திர தினத்தின் போது, இத்துறை முக்கிய பங்கு வகிக்கும். இத்துறையால் புதிய தொழில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இளம் தொழில்முனைவோர் அதிகரித்துள்ளனர். இவர்கள் உலகில் ஸ்டார்ட் அப் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்கு வகிக்கின்றனர். இதைக் கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் ஜன. 16, தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்தாண்டு இத்தினம்
அறிவிக்கப்பட்டது.