/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'பெர்ட்ரம்' வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்'
/
'பெர்ட்ரம்' வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்'
'பெர்ட்ரம்' வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்'
'பெர்ட்ரம்' வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்'
PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

சென்னை, ஆக. 28-
பள்ளிகளுக்கு இடையிலான, 'பெர்ட்ரம்' நினைவு வாலிபால் போட்டியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி, வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
லயோலா கல்லுாரியின் நிறுவனர், 'பெர்ட்ரம்' நினைவு விளையாட்டு போட்டிகள், 91வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகிறது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில், பள்ளி அளவில் மாணவருக்கான வாலிபால் போட்டியில், வேலம்மாள், செயின்ட் பீட்ஸ், டான்பாஸ்கோ, விவேகானந்தா உள்ளிட்ட எட்டு பள்ளிகள் பங்கேற்றன.
முதல் அரையிறுதியில், செயின்ட் பீட்ஸ் அணி, 25 - 17, 25 - 21 என்ற புள்ளி கணக்கில் பெரம்பூர் டான்பாஸ்கோ அணியையும், மற்றொரு அரையிறுதியில், துாத்துக்குடி கால்டுவெல் பள்ளி, 25 - 22, 25 - 18 என்ற புள்ளி கணக்கில், துாத்துக்குடி போப்ஸ் பள்ளியை வீழ்த்தின.
'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடந்த அனைத்து ஆட்டங்கள் முடிவில், இறுதிப்போட்டிக்கு சாந்தோம் செயின்ட் பீட்ஸ் மற்றும் துாத்துக்குடி கால்டுவெல் பள்ளி அணிகள் மோதின.
போட்டியில், செயின்ட் பீட்ஸ் அணி, 25 - 20, 26 - 28, 25 - 22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது.
முன்னதாக நடந்த மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி, 25 - 18, 25 - 22 என்ற புள்ளி கணக்கில், துாத்துக்குடி போப்ஸ் பள்ளியை வீழ்த்தியது.