/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சுப்ரீம் கோர்ட் யு டியூப் சேனல் முடக்கிய மர்ம நபர்கள்
/
சுப்ரீம் கோர்ட் யு டியூப் சேனல் முடக்கிய மர்ம நபர்கள்
சுப்ரீம் கோர்ட் யு டியூப் சேனல் முடக்கிய மர்ம நபர்கள்
சுப்ரீம் கோர்ட் யு டியூப் சேனல் முடக்கிய மர்ம நபர்கள்
PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM
புதுடில்லி,
உச்ச நீதிமன்றத்தின் யு டியூப் சேனல் பக்கம், மர்ம நபர்களால் 'ஹேக்' செய்யப்பட்டதை அடுத்து, அதிலிருந்த வழக்கு விசாரணை தொடர்பான வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகள் அனைத்தையும், அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேகமான யு டியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.
சமீபத்தில், மேற்கு வங்கம் கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் யு டியூபை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இந்த தகவலை உச்ச நீதிமன்றத்தின் 'பார் அண்டு பெஞ்ச்' நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
ஹேக் செய்யப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் யு டியூப் பக்கத்தில், கிரிப்டோகரன்சி குறித்த விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த 'ரிப்பிள் லேப்ஸ்' உருவாக்கிய டிஜிட்டல் கரன்சியான எக்ஸ்.ஆர்.பி.,யை விளம்பரப்படுத்தும் வீடியோக்கள் இந்தப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இருந்த விசாரணை தொடர்பான வீடியோக்கள் அழிக்கப்பட்டு, அந்த தளம் பிரைவேட் ஆக்கப்பட்டுள்ளது. உடனடியாக யு டியூப் சேனலை மீட்கும் பணியில், உச்ச நீதிமன்ற தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
அதேசமயம், பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் குறித்த விசாரணையும் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால விசாரணை வீடியோக்களை குறிவைத்து இந்த ஹேக் சம்பவம் நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால், அந்தக் கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் நியமனத்தை அறிவிப்பதற்கு மத்திய அரசுக்கு குறிப்பிட்ட காலக்கெடு கோரும் பொதுநல வழக்கு உட்பட பல்வேறு வழக்கு விசாரணை நடக்கவுள்ள நிலையில், அதன் யு டியூப் சேனல் மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.