/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சோனியா குடும்பம் மீது தமிழக காங்கிரசார் அதிருப்தி!
/
சோனியா குடும்பம் மீது தமிழக காங்கிரசார் அதிருப்தி!
சோனியா குடும்பம் மீது தமிழக காங்கிரசார் அதிருப்தி!
சோனியா குடும்பம் மீது தமிழக காங்கிரசார் அதிருப்தி!
PUBLISHED ON : டிச 18, 2024 12:00 AM

நாட்டு சர்க்கரை டீக்குஆர்டர் தந்தபடியே,''இஷ்டத்துக்கு நடுவர்களை போட்டுக்கிறாங்க...''என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த போட்டியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கோவையில் இருக்கிற கல்லுாரிகள்ல அடிக்கடி விளையாட்டு போட்டிகள் நடக்குது... பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகள்னு நிறைய நடத்துறாங்க...
''இந்த போட்டிகளுக்குநடுவர்களா இருக்கிறவங்களுக்கு தனியா சம்பளம் தரணும்... ஆனா,சில கல்லுாரிகள்ல நடுவர்களுக்கு அதிகம்செலவு செய்றதை தவிர்க்க, தங்களது கல்லுாரியில படிக்கிற விளையாட்டு வீரர்கள், உடற்கல்வி துறை மாணவர்களையே நடுவர்களா அமர்த்தி, அவங்களுக்கு கம்மியானபணத்தை குடுத்து கதையை முடிச்சுடுறாங்க...
''முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவங்களை தான் நடுவர்களா நியமிக்கணும்கிறது விதி...ஆனா, இப்படி எந்த தகுதியும் இல்லாதவங்களை நடுவர்களா நியமிக்கிறதால, தங்களது கல்லுாரி அணிகளின் வெற்றிக்காக, அவங்க நடுநிலை தவறி நடந்துக்கிறதாகவும் விளையாட்டு வீரர்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து பண்ணிட்டாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''புதிய தமிழகம் கட்சிநிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக குரல் குடுத்துட்டு இருக்காருல்லா... இவங்க பிரச்னைகள் சம்பந்தமா,தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை வெளியிடுறதுக்கு, போன 15ம் தேதி சென்னை தி.நகர்ல பத்திரிகையாளர்சந்திப்புக்கு கிருஷ்ணசாமி ஏற்பாடு பண்ணியிருந்தாரு வே...
''ஆனா, மறைந்த காங்., மூத்த தலைவர் இளங்கோவன் உடல் தகனம் அன்னைக்கு தான் நடந்துச்சு... அதுவும் இல்லாம, அ.தி.மு.க., பொதுக்குழுவும் அன்னைக்கு நடந்துச்சு... இதனால, மீடியாக்கள் கவனம் நம்ம பக்கம் திரும்பாதுன்னு முடிவு செஞ்ச கிருஷ்ணசாமி, பத்திரிகையாளர் சந்திப்பை ரத்துபண்ணிட்டு, கோவைக்குகிளம்பிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''இளங்கோவன் மரணத்துக்கு யாரும் வராதது, கடும் அதிருப்தியை ஏற்படுத்திடுத்து ஓய்...'' என்றகுப்பண்ணாவே தொடர்ந்தார்...
''இளங்கோவன், தமிழக காங்கிரஸ்ல மூத்த தலைவரா இருந்தவர்... அவரது மறைவுக்கு, காங்., தேசிய தலைவர்களான சோனியா, ராகுல்,பிரியங்கான்னு யாருமே வரல ஓய்...
''மல்லிகார்ஜுன கார்கேயாவது வருவார்னுஎதிர்பார்த்து, தமிழக காங்கிரசார் ஏமாந்து போயிட்டா... அதாவது,1996ல் த.மா.கா.,வை மூப்பனார் துவங்கியதும்,காங்கிரஸ் ரொம்ப பலவீனமா இருந்துச்சு... அந்த காலகட்டத்துல, மாநில தலைவரா பொறுப்பேற்ற இளங்கோவன், கடுமையா உழைச்சு கட்சியை மீட்டு எடுத்தார்...
''அதுவும் இல்லாம, ஜெ.,யை எதிர்த்தும் துணிச்சலா அரசியல் செய்தாரு... காங்., ஆட்சியில, மத்திய அமைச்சராகவும் சிறப்பா செயல்பட்டார்...அப்படிப்பட்ட தலைவருக்கு உரிய மரியாதையை சோனியா குடும்பம் தரலையேன்னு,இளங்கோவன் ஆதரவாளர்களும் கடும் விரக்தியில இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''அது சரி... இப்படி இருந்தா, தமிழகத்துல காமராஜர் ஆட்சியை எப்படி அமைக்க முடியும்...'' என்றபடியேஅண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.