sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

ஆந்திர அரசிடம் கமிஷன் கேட்ட தமிழக அதிகாரி!

/

ஆந்திர அரசிடம் கமிஷன் கேட்ட தமிழக அதிகாரி!

ஆந்திர அரசிடம் கமிஷன் கேட்ட தமிழக அதிகாரி!

ஆந்திர அரசிடம் கமிஷன் கேட்ட தமிழக அதிகாரி!


PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆந்திர அரசிடம் கமிஷன் கேட்ட தமிழக அதிகாரி!


''ஹோட்டல்ல வச்சு, 'டீலிங்'கை முடிச்சிடுதாரு வே...'' என்றபடியே, சுக்கு காபிக்கு ஆர்டர் தந்தார்

பெரியசாமி அண்ணாச்சி.''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தாம்பரம் கமிஷனரக கட்டுப்பாட்டுல வர்ற, மறைமலை நகர் போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவுல இருக்கிற, 'உதவி' அதிகாரியை தான் சொல்லுதேன்...

''குற்ற வழக்குல கைது செய்றவங்களை, தனியார் ஹோட்டல் ரூம்ல அடைச்சு, 'டீலிங்' முடிச்சிட்டு தான், ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர்றாரு வே...

''அப்புறமா, அவங்களை ஜெயிலுக்கு அனுப்புறப்ப, அவங்க மொபைல் போன்களை வாங்கி வச்சிக்கிடுதாரு... அவங்க ஜாமின்ல வந்ததும், குறிப்பிட்ட தொகை குடுத்தா தான், போன்களை திருப்பி

தர்றாரு வே..

.

''உயர் அதிகாரிகளுக்கும் பங்கு குடுத்துடுறதால, அவரை யாரும் கண்டுக்க மாட்டேங்காவ...

''எல்லாத்துக்கும் மேலா, நைட் டூட்டிக்கு போதையில தான் வர்றாரு... போன மாசமே, அவரை துணை கமிஷனர்

கண்டிச்சும் திருந்தல வே...'' என்றார், அண்ணாச்சி.

''சுரேஷ், இந்த நாடகத்தையும் கேட்டுட்டு போங்க...'' என, நண்பரை இழுத்து பிடித்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

'திருப்பூர் கலெக்டர் ஆபீஸ்ல, நெடுஞ்சாலைத் துறை துணை தாசில்தாரா இருந்தவர், திடீர் நெஞ்சு வலியால, கோவை தனியார் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டாருங்க... ஆனா, அது நாடகமாம்...

''துணை தாசில்தாருக்கு, தேனி, பெரியகுளத்துல பண்ணை வீடு இருக்கு... அங்க பணிபுரியும் ரெண்டு பேரை, இவர் அடிச்சிட்டாருங்க... அவங்க போலீஸ்ல புகார் தர வன்கொடுமை தடுப்பு சட்டத்துல வழக்கு பதிவு பண்ணிட்டாங்க...

''துணை தாசில்தார், மாஜிஸ்திரேட் பயிற்சி முடிச்சிருக்கிறதால, அவரை உடனே கைது பண்ணிட முடியாது... இதுக்காக, கலெக்டரிடம் போலீசார் அனுமதி கேட்டிருக்காங்க...

''கைதானா, சஸ்பெண்ட் ஆகிடுவோம்கிறதால, வக்கீல் தந்த ஆலோசனையை கேட்டு, நெஞ்சுவலின்னு நாடகமாடி, துணை தாசில்தார் ஆஸ்பிட்டல்ல போய் படுத்துட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''முருகேஸ்வரன் இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''ஆந்திர அரசிடம் கமிஷன் கேட்ட அதிகாரி கதையை கேளுங்கோ...'' என்ற

படியே தொடர்ந்தார்...

''தெலுங்கு கங்கை திட்டப்படி, சென்னை குடிநீர் தேவைக்காக வருஷத்துக்கு 12 டி.எம்.சி., தண்ணீரை, ஆந்திர அரசு தரணும்... கால்வாய் பராமரிப்பு

கட்டணமா வருஷத்துக்கு 10 முதல் 20 கோடி ரூபாயை, தமிழக அரசு குடுக்கறது ஓய்...

''நடப்பாண்டு பராமரிப்பு கட்டணத்தை நிர்ணயம் செய்ய, சென்னையில் உள்ள நீர்வளத்துறை அதிகாரி ஒருத்தரை, டிசம்பர் கடைசியில ஆந்திராவுக்கு அனுப்பி வச்சா... அங்க போனவர், 'தமிழக

அரசு தர்ற பணத்துல, எனக்கு கமிஷன் தருவீங்களா'ன்னு அப்பாவியா கேட்டிருக்கார் ஓய்...

''ஜெர்க்கான ஆந்திர அதிகாரிகள், 'அரசு கஜானாவுக்கு போற பணத்துக்கு கமிஷன் வேணும்னா, எங்க முதல்வரிடம் தான் நீங்க கேட்கணும்'னு சொல்லி சிரிப்பா சிரிச்சிருக்கா ஓய்...

''கமிஷன் கேட்ட அதிகாரி, துறையின் முக்கிய புள்ளி உதவியாளருக்கு பெரிய தொகை குடுத்து தான், கோவையில இருந்து புரமோஷன்ல சென்னைக்கு வந்திருக்கார்...

''சில மாசத்துல, 'ரிட்டையர்' ஆக போறதால, குடுத்த பணத்தை எப்படி எடுக்கறதுன்னு தெரியாம, ஆந்திர அதிகாரிகளிடம் கமிஷன் கேட்டுட்டதா, துறைக்குள்ள பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''உமாபதி, கண்ணன் தந்த பணத்தை வாங்கிட்டீரா வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி கதை பேச, மற்றவர்கள் எழுந்தனர்.

****************

சிவில் வழக்கில் புகுந்து விளையாடும் எஸ்.ஐ.,


''கட்சி பாகுபாடு பார்க்காம, அறிமுக நடிகரை பாராட்டினாருல்லா...'' என்றபடியே, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''வெளிநாடுகளில் வேலை பார்க்குற தமிழர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுதாங்கன்னு, ஆஸ்திரேலிய தமிழர்களின் வாழ்க்கை குறித்து, காழ் என்ற சினிமாவை தயாரிச்சிருக்காவ...

''இதில், தமிழக காங்., பொது செயலர் சுமதி அன்பரசுவின் மகன் சித்தார்த் அன்பரசு, மறைந்த பாடகர் மலேஷியா வாசுதேவன் மகன் யுகேந்திரன்

நடிச்சிருக்காவ வே...

''படத்தின், 'ப்ரீவியூ' காட்சியை பார்க்க, நாம் தமிழர் கட்சி சீமானை, சுமதி அன்பரசு நேர்ல போய் அழைச்சிருக்காங்க... காங்கிரசை

அரசியல் எதிரியா கருதுற சீமான் வருவாரோ, மாட்டாரோ என்ற சந்தேகத்தோட தான் இருந்தாங்க...

''ஆனா, கதையை கேள்விப்பட்ட சீமான், படத்தை பார்த்தது மட்டுமில்லாம, அதில் நடிச்ச சித்தார்த்தையும் பாராட்டிட்டு போயிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''போக்குவரத்து போலீசார் காட்டில் அடை மழை தான் போங்கோ...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''எந்த ஏரியான்னு சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னை செங்குன்றம் போக்குவரத்து போலீசார், அபராதம் போட்டு பாக்கெட்டை நிரப்பறதுலயே கண்ணும் கருத்துமா இருக்கா...

''செங்குன்றம் போக்கு வரத்து எல்லை மீஞ்சூர் வரை இருக்கறதால, செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, புறவழிச்சாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலைகளில் பண மழை

கொட்டறது ஓய்...

''விதி மீறும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்க, 16 டிவைஸ்களை பயன்படுத்தி காசு கறந்துண்டு இருக்கா... எஸ்.ஐ.,க்கள் தான் இந்த இயந்திரத்தை பயன்படுத்தணும் ஓய்...

''ஆனா, கான்ஸ்டபிள் முதல் அதிகாரிகளின் கார் டிரைவர்கள் வரை, அத்தனை பேரும் இதை வச்சு, தனி வசூலை போட்டுண்டு இருக்கா... இதுக்காக, அதிகாரிகளுக்கு ஒரு இயந்திரத்துக்கு மாசம், 10,000 ரூபாய் கப்பம் கட்டறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மலைச்சாமி, இந்த பேப்பரை அங்க வைங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''அரசு நிலங்களை அபகரிச்சவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்குதுங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...

''திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா ஆண்டியகவுண்டனுார் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான ஜம்புக்கல் மலைத் தொடர் இருக்குதுங்க... இங்க, விவசாயிகளுக்கு அரசு கண்டிஷன் பட்டா கொடுத்துச்சு...

''ஆனா, தனி நபர் ஒருத்தர், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மோசடி ஆவணங்கள் வாயிலா ஆக்கிரமிச்சு இருக்காருங்க...

விவசாயிகள், அரசு அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவும்

மறுக்குறாருங்க...

''இதனால, அங்க ஆய்வு நடத்துன வருவாய் துறை ஆர்.டி.ஓ., எல்லாம் மோசடி ஆவணம் என்பதை உறுதி செஞ்சிட்டாரு... இது சம்பந்தமா நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்குதுங்க...

''ஆனாலும், இந்த பகுதி எஸ்.ஐ., மோசடி நபருக்கு ஆதரவா அந்த நிலத்தில் கேட் அமைச்சு, கண்காணிப்பு கேமரா பொருத்தி, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு தர்றாருங்க...

''சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிடக் கூடாதுன்னு ஏ.டி.ஜி.பி., அருண் அறிவுறுத்தியும், எஸ்.ஐ., அடாவடியா செயல்படுறதை யாரும் தட்டிக் கேட்க மாட்டேங்குறாங்க...'' என்ற அந்தோணிசாமி, ''அட, வாங்க சண்முகமூர்த்தி சார்...'' என, நண்பரிடம்

பேச்சு கொடுக்க, சபை கலைந்தது.






      Dinamalar
      Follow us