sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

டீ கடை பெஞ்சு

/

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு


PUBLISHED ON : ஜூலை 26, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 26, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நில அபகரிப்பு: பத்திரப்பதிவு துறையில், 'கிலி!'



''அமைச்சர்கிட்ட பால் உற்பத்தியாளர்கள் புகார் தரப் போறாங்க பா...!'' என, விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய்.''பால் விலையை உயர்த்தச் சொல்லியாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''இல்லை பா...

சேலம் மாவட்டத்துல இருந்து டேங்கர் லாரியில, சென்னைக்கு பால் கொண்டு வர ஆவின்ல ஒப்பந்தம் போட்டுருக்காங்க... ஒரு கிலோ மீட்டருக்கு கூடுதலா ஏழு ரூபாய் நிர்ணயிச்சு, டேங்கர் தொழில் நடத்துபவருக்கு, 60 லாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க பா... இந்த தொழிலை நடத்துபவரும், பால் வளத்துறை அமைச்சரோட, 'ஸ்பெஷல்' பி.ஏ.,வா, ஆகப்போறவரும் கூட்டாம்; இவர், கடந்த ஆட்சியில அறிவாலயத்திலேயே முகாமிட்டு, அப்போதைய அமைச்சரோட, பி.ஏ.,வா இருந்து, 20 நாள்ல திருப்பி அனுப்பப்பட்டவராம்...



''இந்த வருங்கால பி.ஏ.,வும், டேங்கர் அதிபரும் சேர்ந்து செய்ற காரியங்களால, ஆவினுக்கு வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டமாகும்னு பால் உற்பத்தியாளர்கள் புலம்புறாங்க... அதனால, வேளாண் அமைச்சர் செங்கோட்டையனிடம் புகார் செய்ய காத்திருக்காங்க பா...'' என விளக்கினார் அன்வர்பாய்.''நில அபகரிப்பு தனிப்பிரிவுக்கு, உளவுத்துறையினர் பெரிய அளவில் உதவி செய்றாங்க வே...'' என அடுத்த தகவலுக்கு தாவினார் பெரியசாமி அண்ணாச்சி.



'என்ன மாதிரி உதவின்னு சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''தமிழகம் முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில், பல கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி பதிவு செய்தோர் பட்டியல் தயாராவுது வே... எல்லா பத்திரப்பதிவு ஆபீசிலும், ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமா பதிவு செய்தோர் பட்டியலை, உளவுத்துறை போலீஸ் தயாரிச்சிருக்காவ... தி.மு.க.,வினர் எத்தனை பேர், தி.மு.க., கூட்டணிக் கட்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் எத்தனை பேர்னு, 'லிஸ்ட்' தயாராயிருக்கு... இதில், யார் மீதெல்லாம் புகார் உள்ளதோ, அவங்கள புடிச்சு விசாரிக்கிறாங்க வே...



''இதேபோல, பட்டா, சிட்டா, அடங்கல் என ஆவணமில்லாமலும், வீட்டு மனை அங்கீகாரம் பெறாமலும் மோசடி நிலங்களை, பதிவு செய்ய உடந்தையா இருந்த அதிகாரிகளின் பட்டியலும் தயாராயிருக்காம்... அவங்கல்லாம் எப்போ நடவடிக்கை வரும்னு, 'கிலி'யில் இருக்காவ...'' என விவரித்தார் அண்ணாச்சி.



''திரும்பவும் கேபிள் சண்டை ஆரம்பிச்சுடுத்து ஓய்...'' என, கடைசி மேட்டரை ஆரம்பித்தார் குப்பண்ணா.''அரசு கேபிள் முழுமையா அமலாகற வரை அப்படி இப்படித்தான் வே இருக்கும்...'' என்றார் அண்ணாச்சி.''மதுரையில ராஜ், 'டிவி' குரூப் சேனல்கள் எல்லாம் மூணு நாளா தெரியலை ஓய்... அங்க இருக்கற ஆபரேட்டர்கள்ல பெரும்பாலானவா,

'ஆனா' தலைமையில செயல்படறவா... அவாளுக்கும், இவாளுக்கும் மோதலாகி, 'கட்' பண்ணிட்டாளாம்...



''பொதுமக்கள் கேட்டா, 'தொழில்நுட்பக் கோளாறு'ன்னு சொல்லிடறா... ஆனா, அப்படி எந்தக் கோளாறும் இல்லை... அரசியல் பழிவாங்கும் செயல் தான் இதுன்னு இவா தரப்புல சொல்றா... ஏற்கனவே கேபிள் அறுப்பு, கழுத்தறுப்புன்னு ரணகளம் நடந்த ஊர் மதுரை... ஹூம்... இந்தப் போர் எதுவரை போகப் போறதோ...'' என, பெருமூச்சு விட்டபடி எழுந்தார் குப்பண்ணா; பெஞ்ச் அமைதியானது.








      Dinamalar
      Follow us