/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பைக்குகள் மோதிய விபத்தில் ஆசிரியர் பலி; மகன் படுகாயம்
/
பைக்குகள் மோதிய விபத்தில் ஆசிரியர் பலி; மகன் படுகாயம்
பைக்குகள் மோதிய விபத்தில் ஆசிரியர் பலி; மகன் படுகாயம்
பைக்குகள் மோதிய விபத்தில் ஆசிரியர் பலி; மகன் படுகாயம்
PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM
வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 38; இவர், வாலாஜாபாத் மாசிலாமணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு மனைவி உமா, 32, மகன் சுபக் ஷன் 12, உள்ளனர்.
சண்முகம் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் மகனை, காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனைக்கு, 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனம் வாயிலாக, நேற்று முன்தினம், இரவு 9:30 மணிக்கு அழைத்து சென்றார்.
சிகிச்சை முடிந்து, மகனுடன் இருசக்கர வாகனத்தில் சண்முகம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், வெண்குடி அருகே வந்த போது, காஞ்சிபுரம், வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 30, என்பவர் ஓட்டி வந்த, 'ஹோண்டா யூனிகார்ன்' இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன.
இதில், தலையில் பலத்த காயமடைந்த சண்முகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் சுபக் ஷன் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அப்பகுதியினர் மீட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் வாயிலாக, காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.