sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

சட்டத்தை மீறி சதிராடும் கோவில் சட்ட அலுவலர்!

/

சட்டத்தை மீறி சதிராடும் கோவில் சட்ட அலுவலர்!

சட்டத்தை மீறி சதிராடும் கோவில் சட்ட அலுவலர்!

சட்டத்தை மீறி சதிராடும் கோவில் சட்ட அலுவலர்!

2


PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏலக்காய் டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''ஏரிநீரில், இறைச்சிக் கழிவுகள் கலக்குது பா...'' என, விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''சென்னை, ஆவடி கோவில்பதாகை ஏரி பல வருஷமா துார்வாராம இருக்கு... மழைக் காலங்கள்ல, வடிகால்வாய் வழியா வெளியேறும் வெள்ளநீர், ஊருக்குள் புகுந்துடுது பா...

''இதுக்கு தீர்வு காண, 38 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்வாயை 2 அடிக்கு ஆழப்படுத்தும் பணி நடக்குது... இந்த கால்வாய் மீது அஞ்சு இறைச்சிக் கடைகள் உட்பட ஏழு கடைகள் ஆக்கிரமிச்சு கட்டப்பட்டிருக்குது... இதுல, சில கடைகள் தி.மு.க.,வினருக்கு சொந்தமானது பா...

''இந்த கடைகள்ல இருந்து வெளியேறும் கழிவுகள், ஏரியின் உபரி நீரில் கலக்குது... இந்த தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் வழியா புழல் ஏரிக்கு போகுது பா...

''கால்வாயை ஆழப்படுத்துறவங்க, இந்த ஏழு கடைகளை கண்டுக்கவே இல்ல... இதனால, 'ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை முழுமையா ஆழப்படுத்தினா தான், தண்ணீர் ஊருக்குள்ள புகாம இருக்கும்'னு அந்த பகுதி மக்கள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''சத்தமில்லாம திரும்பிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''ஊட்டியில் கவர்னர் ரவி நடத்திய துணைவேந்தர்கள் மாநாட்டை, ஆளுங்கட்சி மிரட்டலுக்கு பயந்து பலரும் புறக்கணிச்சுட்டாங்களே... ஆனா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் சந்திரசேகர், மாநாட்டுக்கு முதல் நாளே, கார்ல ஊட்டிக்கு போயிட்டாருங்க...

''அங்க இருந்த கவர்னர் அலுவலக அதிகாரிகளை பார்த்து, தன் வருகையை பதிவும் பண்ணிட்டாரு... மறுநாள் காலையில் துவங்கிய மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் யாரும் வரலைங்கிற தகவல் தெரிஞ்சதும், இவரும் அந்த பக்கமே எட்டி பார்க்காம, சத்தமில்லாம நெல்லைக்கு கிளம்பிட்டாருங்க...

''இதனால, 'ஒருபக்கம் கவர்னர் அலுவலக அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுத்தவர், மறுபக்கம் தமிழக அரசின் விருப்பப்படி மாநாட்டையும் புறக்கணிச்சுட்டார்'னு, பல்கலை வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சட்ட அலுவலரா இருந்தும், பண்றதெல்லாம் சட்டத்தை மீறிய காரியமா இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் சட்டப்பிரிவுல இருக்கற ஒருத்தர், துறையின் முக்கிய புள்ளிக்கு வேண்டியவர்னு சொல்லி, கோவில்ல எல்லாரையும் மிரட்டி, காரியங்களை சாதிக்கறார்...

''பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள்ல வர்ற பக்தர்களை, சில புரோக்கர்கள் மூலம் சீக்கிரமா தரிசனத்துக்கு அனுப்பி, ஆயிரக்கணக்குல சம்பாதிக்கறார் ஓய்...

''கோவில் நிலங்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் இவர், கோவில் வக்கீல் சொல்றதை கேக்காம, லட்சக்கணக்குல பணத்தை வாங்கிட்டு, குத்தகைதாரர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஆதரவா வழக்கை இழுத்தடிக்கறார்...

''எல்லாத்துக்கும் உச்சகட்டமா, கோவிலுக்கான நுழைவு டிக்கெட்டை போலியா அடிச்சு, கோவில் ஊழியர்கள் ஆதரவுடன் மோசடியில ஈடுபடறார்...

''பிரசித்தி பெற்ற கோவிலுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தற இவர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு, உள்ளூர் பக்தர்கள் பலரும் அரசுக்கு புகார் மேல புகார் அனுப்பிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''பாபு இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us