உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 03, 2026 05:22 AM

அ நிறம் | அளவு
கா ஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, பாரதியார் தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு கம்பத்தின் அடிபாகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
இத்தெருவில் செல்லும் வாகனங்கள் லேசாக உரசினாலே மின்கம்பம் உடைந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சிதிலமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.ஆனந்தன், காஞ்சிபுரம்.
