/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கொடுங்கையூரில் குப்பை எரி உலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்
/
கொடுங்கையூரில் குப்பை எரி உலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்
கொடுங்கையூரில் குப்பை எரி உலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்
கொடுங்கையூரில் குப்பை எரி உலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்
PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM
''சென்னையில் சேகரமாகும் திடக்கழிவுகளை எரித்து அழிக்க, கொடுங்கையூரில் குப்பை எரி உலையை, மாநகராட்சி அமைக்கிறது.
இத்திட்டம் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல் நலனையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், சுற்றுச்சூழல் அமைப்புகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குப்பை எரி உலைகள், குப்பை அழிப்பதற்கான தீர்வாக ஒருகாலத்தில் கருதப்பட்டாலும், அன்று முன்னெடுத்த மேற்கத்திய நாடுகள், எரி உலைகளை மூடி வருகின்றன.
குப்பை எரி உலைகள் கழிவை அழிப்பதில்லை. மாறாக, அவற்றை நச்சு சாம்பலாகவும், வாயுவாகவும் மாற்றுகின்றன. இந்த நச்சு வாயு, புற்றுநோய் உள்ளிட்ட தீவிர உடல் நல பாதிப்பை உருவாக்கும்.
எனவே, வடசென்னையில் மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள எந்த மூலையிலும், இத்தகையை குப்பை எரி உலைகளை அரசு கொண்டு வரக்கூடாது.
- துரை,
முதன்மை செயலர்,
ம.தி.மு.க.,