PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
திருவொற்றியூரை சேர்ந்த ஏழு வயது சிறுமி. தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மேல் தளத்தில் வசிக்கும் கட்டடத் தொழிலாளியான மோத்தி, 42, என்பவர், குடிபோதையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர், திருவொற்றியூர் மகளிர் காவல் துறையில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மோத்தியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

