தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ இன்ப சுற்றுலா செல்ல 'கட்டிங்' வசூலிக்கும் அதிகாரி!

 இன்ப சுற்றுலா செல்ல 'கட்டிங்' வசூலிக்கும் அதிகாரி!

 இன்ப சுற்றுலா செல்ல 'கட்டிங்' வசூலிக்கும் அதிகாரி!

6


PUBLISHED ON : செப் 21, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2026 12:55 AM

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“பி டீமா இருக்குமோன்னு சந்தேகப்படுறாங்க...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

“எந்த கட்சியை சொல்றீங்க பா...” என, பட்டென கேட்டார் அன்வர்பாய்.

“பா.ஜ., தமிழக தலைவரா இருந்த அண்ணாமலை, அந்த கட்சியில் இருந்து விலகி, 'வீ த லீடர்ஸ்'னு ஒரு அமைப்பை நடத்திட்டு இருக்காரே... பா.ஜ.,வில் அவருடன் இருந்தவங்க, இளைஞர்கள், பணி ஓய்வு போலீசார், சட்டம் படிச்சவங்கன்னு நிறைய பேர் இந்த அமைப்புல சேர்ந்திருக்காங்க...

“மதுரை பா.ஜ.,வினர் நிறைய பேரும் இந்த அமைப்பில் சேர்ந்திருக்காங்க... சில வாரங்களுக்கு முன்னாடி மதுரை வந்த அண்ணாமலை, வைகை நதியை சுத்தம் செஞ்சாரு... அவருடன் நிறைய இளைஞர்களும் களத்தில் குதிச்சு, வைகையை சுத்தம் செஞ்சாங்க...

“இப்ப, வைகையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டோருக்கு விருதும், அண்ணா மலையுடன் போட்டோவும் எடுத்துக்கிற வாய்ப்பை வாங்கி தர்றதா சொல்லி, சிலர் வசூல் வேட்டையில இறங்கிட்டாங்க... இதே காரணத்தை சொல்லி, வர்த்தக நிறுவனங்கள்லயும் வசூல் நடக்குதுங்க...

“இந்த வசூல் வேட்டையில் ஈடுபடுறவங்க, முன்னாள் பா.ஜ.,வினர் தான்... இதனால, 'பா.ஜ.,வின் பி டீமாவே இந்த அமைப்பு செயல்படுதோ'ன்னு, பலரும் அலறியடிச்சு ஓடுறாங்க...” என்றார் அந்தோணிசாமி.

“முறைகேடு அதிகாரி கலக்கத்துல இருக்கார் ஓய்...” என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.

“எந்த துறையில வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

“துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் ஏகப்பட்ட விதிமீறல்கள் நடக்கறது... புதுசா சேமிப்பு கிடங்குகள் கட்ட, போன வருஷம் அரசு, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குச்சு ஓய்...

“அதாவது, '50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளா இருந்தா, 'டெண்டர்' விடணும்'னு விதிமுறை இருக்கு... பண்டகசாலையின் உயர் அதிகாரியோ, தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரரிடம் கமிஷன் வாங்கிண்டு, தலா 32 லட்சம் ரூபாய் மதிப்புல இரண்டு கிடங்குகளா பிரிச்சு கணக்கு காட்டி, பணத்தையும் ஒதுக்கீடு பண்ணிட்டார் ஓய்...

“அதுவும் இல்லாம, முதல் கட்ட கட்டுமான பணிகளே முடியாத சூழல்ல, அடுத்த கட்ட பணிக்கு குறிப்பிட்ட தொகையை அதிகாரி விடுவிச்சிருக்கார்... இது சம்பந்தமா, கூட்டு றவு துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் போயிருக்கறதால, சம்பந்தப்பட்ட அதிகாரி அதிர்ச்சியில இருக்கார் ஓய்...” என்றார் குப்பண்ணா.

“பாலமுருகன், தள்ளி உட்காருங்க...” என்ற அன்வர்பாய், “வெள்ளிக்கிழமை சாயந்தரமானா கிளம்பிடுறாரு பா...” என்றபடியே தொடர்ந்தார்...

“திருப்பூர்ல, கலெக்டருக்கு அடுத்த நிலையில் ஒரு அதிகாரி இருக்கார்... இவர், வெள்ளிக்கிழமை சாயந்தரமானா, எங்காவது இன்ப சுற்றுலா கிளம்பிடுறாரு பா...

“சனி, ஞாயிறு விடுமுறையை கொண்டாடுறது, அவரது தனிப்பட்ட விருப்பம்... ஆனா, அதுக்கான செலவுகளை ஒவ்வொரு வாரமும், ஒரு தாலுகா அதிகாரி தலையில கட்டிடுறாரு பா...

“மாவட்டத்துல ஒன்பது தாலுகாக்கள் இருக்கு... ஒவ்வொரு வாரமும், ஒரு தாலுகா அதிகாரியிடம் குறைஞ்சபட்சம் 15 ஆயிரம் ரூபாயை கறாரா கறந்துடுறாரு... 'அதிகாரியை பகைச்சுக்கிட்டா நல்லாயிருக்காதே'ன்னு, தாலுகா அதிகாரிகளும் பயந்து போய், அவர் கேட்டதை குடுத்துடுறாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.

“கார்த்திகேயன், இங்கன உட்காரும்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us