PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, டிச. 10-
தர்மபுரி மாவட்டம், செல்லியம்பட்டி அடுத்த, பச்சனம்பட்டியை சேர்ந்த சித்திரசேனன், 39. இவர் தர்மபுரி - பாப்பாரப்பட்டி சாலையில் பச்சனம்பட்டி அருகே, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த, 7 அன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த, 3,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.