/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா
/
திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா
PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM
காஞ்சிபுரம்:உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில் நடந்த கோடை சிறப்பு திருக்குறள் பயிற்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், காலை 6:15 - 7:20 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:15 - 12:15 மணி வரை திருக்குறள் ஒப்புவிக்க இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கோடைகால சிறப்பு திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா, திருக்குறள் பேரவை தலைவர் புலவர் பரமானந்தம் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், 1,330 குறட்பா முடித்தவர்கள், 500 - 1000; 300 - 500 குறட்பா முடித்த மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சியில் பங்கேறற மாணவ - மாணவியருக்கு காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார்.
முன்னதாக திருக்குறள் பேரவை நிறுவனர் குறள் அமிழ்தன் துவக்கவுரையாற்றினார். இதில், திருக்குறள் பயிற்றுநர்கள், பேரவை நிர்வாகிகள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.