/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் 'வீல்ஸ் இந்தியா' அணி வெற்றி
/
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் 'வீல்ஸ் இந்தியா' அணி வெற்றி
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் 'வீல்ஸ் இந்தியா' அணி வெற்றி
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் 'வீல்ஸ் இந்தியா' அணி வெற்றி
PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

சென்னை, ஏடி.சி.ஏ., எனும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட பல்வேறு நிறுவனங்கள், அகாடமி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம், ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லுாரியில், முதலாவது டிவிஷன் 'பி' பிரிவு போட்டிகள் நடந்தன.
முதலில் பேட்டிங் செய்த, வீல்ஸ் இந்தியா நிறுவன அணி, 40.2 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 164 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய கொரட்டூர் சி.சி., அணி, 32.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, போராடி 143 ரன்களை வரை அடித்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மற்றொரு போட்டியில், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை அணி, 29.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 136 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் சுபன் கிருஷ்ணா, 38 ரன்களை கொடுத்து, ஐந்து விக்கெட் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய, ஸ்டாண்டர்ட் சி.சி., அணி 24 ஓவர்களில் நான்கு விக்கெட் மட்டும் இழந்து, 137 ரன்களை அடித்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

