sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

புகாரில் சிக்கியவர்களுக்கு உளவுப்பிரிவில் பணி!

/

புகாரில் சிக்கியவர்களுக்கு உளவுப்பிரிவில் பணி!

புகாரில் சிக்கியவர்களுக்கு உளவுப்பிரிவில் பணி!

புகாரில் சிக்கியவர்களுக்கு உளவுப்பிரிவில் பணி!


PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெது வடையை சட்னியில் புரட்டியபடியே, ''வேலைக்கு சரியா வர மாட்டேங்கறாஓய்...'' என, அரட்டையைஆரம்பித்தார் குப்பண்ணா.

''எந்த அரசு அலுவலகத்துலங்க...'' என,கற்பூரமாக கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னை, அண்ணாசாலையில் மின் வாரிய தலைமை அலுவலகம் இருக்கோல்லியோ... இங்க, அதிகாரிகள், ஊழியர்கள்னு பல ஆயிரம் பேர் வேலை பார்க்கறா ஓய்...

''ஏற்கனவே, பல துறைகள்லயும் ஆட்கள்பற்றாக்குறை இருக்கு... இதனால, இரண்டு, மூன்றுபேர் பணிகளை ஒருத்தரேசெய்ய வேண்டியிருக்குஓய்...

''இந்த சூழல்ல, அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்த சில ஊழியர்கள், நேரத்துக்கு வேலைக்கு வர மாட்டேங்கறா... அப்படியே வந்தாலும், கொஞ்ச நேரம் இருந்துட்டு, இடத்தை காலி பண்ணிடறா ஓய்...

''மாச கடைசியில, தங்களுக்கு வேண்டியஅதிகாரிகளை பிடிச்சு, வருகை பதிவேட்டை சரிபண்ணி, முழு சம்பளத்தையும் வாங்கிடறா... சமர்த்தா வேலை செய்யறவா தான், கூடுதல் பணிப்பளுவால,மன உளைச்சல்ல தவிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மாவட்டத்தைப் பிரிச்சு 17 வருஷமாகியும்,அலைச்சல் மட்டும் குறையல வே...'' என்றபெரியசாமி அண்ணாச்சியேதொடர்ந்தார்...

''பெரம்பலுார் மாவட்டத்துல இருந்து அரியலுாரை, 2007ல் தனி மாவட்டமா பிரிச்சாங்கல்லா... ஆனா, 17 வருஷமாகியும், நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் உட்பட பலஅரசு அலுவலகங்கள் இன்னும் பிரிக்கப்படவேஇல்ல வே...

''சமீபத்துல முதல்வர் பங்கேற்ற அரசு விழாக்களை கூட, ரெண்டு மாவட்டங்களுக்கும் பொதுவா, அரியலுார்லயேநடத்தி முடிச்சிட்டாவ... அதே மாதிரி, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைகூட்டங்களைக் கூட, ரெண்டு மாவட்டத்துக்கும்சேர்த்து ஒரே ஊர்ல தான்பெரும்பாலும் நடத்துதாவவே...

''இப்படி பல அலுவலகங்கள் ஒரே ஊர்ல இருக்கிறதாலும், நிகழ்ச்சிகளை ஒரே இடத்துல நடத்துறதாலும், அங்குமிங்குமா அலைஞ்சு அதிகாரிகளும், பொதுமக்களும் அவதிப்படுதாவவே...'' என்றார், அண்ணாச்சி.

''திருடன் கையில சாவியை குடுத்த மாதிரி ஆகிடுச்சு பா...'' என்றார்,அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார்,அந்தோணிசாமி.

''சென்னை, தாம்பரம்போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டுல வர்ற ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்களின் உளவுப்பிரிவுக்கு, சமீபத்துல ரெண்டு போலீசாரை நியமிச்சிருக்காங்க... தங்களது எல்லையில நடக்கிற குற்ற நடவடிக்கைகள், ஸ்டேஷன்ல நடக்கிற தவறுகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறது தான் இவங்க வேலைப்பா...

''இப்ப வந்திருக்கிற ரெண்டு பேர் மேலயும் ஏற்கனவே ஏகப்பட்ட புகார்கள் இருக்கு... இதுல ஒருத்தர், சில வருஷங்களுக்கு முன்னாடி கூடுவாஞ்சேரியில் பணியில இருந்தப்ப,நிறைய புகார்கள்ல சிக்கி,நீலகிரி மாவட்டத்துக்கு துாக்கி அடிக்கப்பட்டாருபா...

''யார், யாரையோ பிடிச்சு மறுபடியும் இங்கவந்துட்டாரு... இன்னொருத்தரோ, மணிமங்கலம் ஸ்டேஷன்ல பணியில இருந்தப்ப, அங்க பறிமுதல் பண்ணிவச்சிருந்த எட்டு பைக்குகளை சக போலீசாருடன்சேர்ந்து வித்துட்டாரு பா...

''இதனால, அங்க இருந்து துாக்கி அடிக்கப்பட்டவர், இப்ப முக்கியமான உளவுப்பிரிவுக்கு வந்துட்டாரு... 'ரெண்டு பேர் காட்டுலயும் இனி பண மழை கொட்டும்'னுநேர்மையான போலீசார்சொல்றாங்க பா...'' எனமுடித்தார், அன்வர்பாய்.

பெரியவர்கள் கிளம்ப,பெஞ்ச் மவுனித்தது.






      Dinamalar
      Follow us