/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கார் - மினி லாரி மோதல் குழந்தை உட்பட மூவர் பலி
/
கார் - மினி லாரி மோதல் குழந்தை உட்பட மூவர் பலி
PUBLISHED ON : டிச 13, 2024 12:00 AM
கோவை:கோவை, மதுக்கரையிலிருந்து நீலம்பூர் செல்லும் பை - பாஸ் சாலையில் 'ஆல்டோ' கார் ஒன்று பாலத்துறை சந்திப்பை கடந்து சென்றது. பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே மரப்பாலம் நோக்கி வந்த மினி லாரி மீது மோதியது.
இதில், காரில் இருந்த கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த ஜேக்கப் ஆபிரகாம், 60, மனைவி ஷீபா, 55, இரு மாத பேரக்குழந்தை ஆரோன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருமகள் எலீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மினி லாரி டிரைவரான கரூரை சேர்ந்த சக்திவேலிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவர் பலி
கோவை, சூலுார் அருகேயுள்ள பாப்பம்பட்டி, செந்துார் நகரை சேர்ந்த முத்துசாமி மகன் அமுதேஸ்வரன், 18; பி.இ., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று பைக்கில் நண்பர் ஆகாஷுடன் கல்லுாரிக்கு பை - பாஸ் சாலையில் சென்றார்.
மதுக்கரை டோல் கேட் அருகே எதிரே வந்த கார், பைக் மீது மோதியதில் இருவரும் சாலையில் விழுந்தனர். காருக்கு பின்னால் வந்த லாரி அமுதேஸ்வரன், ஆகாஷ் மீது மோதியது. இதில், அமுதேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆகாஷ் காயங்களுடன் தப்பினார். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

