தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாட ' டார்ச்சர்! '

உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாட ' டார்ச்சர்! '

உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாட ' டார்ச்சர்! '


PUBLISHED ON : டிச 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “கேட்டப்ப எல்லாம் லாங் லீவ் குடுத்துடுறாங்க...” என, விவாதத்தை ஆரம்பித்தார்அந்தோணிசாமி

“யாருக்கு வே...” எனகேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

“முதல்வர் அலுவலகத்துல, மூன்றாவது செயலரா இருக்கிற பெண்ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 136நாட்கள் லாங் லீவ்ல கிளம்பிட்டாங்க... இதே மாதிரி, போன வருஷமும் லாங் லீவ்ல போயிட்டாங்க...

“தன் குழந்தைகளை கவனிக்கணும்னு காரணம்சொல்லி தான், லீவ் எடுக்கிறாங்க... அதே நேரம், 'அவங்களுக்கு பதிலா வேற அதிகாரியாரையும் நியமிக்காம,ஏற்கனவே பணியில இருக்கிற அதிகாரிகளிடமே பெண் அதிகாரியின் பணிகளைபகிர்ந்து குடுத்துடுறாங்க... இதனால, அவங்களுக்கும் வேலைப்பளு அதிகமாகுது... இந்த மாதிரி, வேற யாருக்கும் லாங் லீவ் தருவாங்களா'ன்னு கோட்டை வட்டாரத்துலகுமுறல்கள் கேட்குதுங்க...”என்றார், அந்தோணிசாமி.

“முன்ஜாமினுக்காகஓடிட்டு இருக்காருப்பா...”என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“பெரம்பலுார் மாவட்டம், காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியரா இருந்த ஒருத்தர், இன்னும்ரெண்டு வருஷத்துல, 'ரிட்டயர்' ஆக இருந்தாருப்பா...

“இதனால, இவரதுசான்றிதழ்களின் உண்மைதன்மையை அறிய, மாவட்ட உதவி தேர்வு இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வச்சாங்க...ஆய்வுல ஆசிரியர் பட்டய படிப்புல, அவர்ரெண்டு பாடத்துல பெயிலானதும், போலி சான்றிதழ் குடுத்து பணியில் சேர்ந்ததும் தெரியவந்துச்சு பா...

“உடனே, ஆசிரியரைடிஸ்மிஸ் பண்ணிட்டாங்க...போலி சான்றிதழ் குடுத்து,26 வருஷமா அரசிடம் சம்பளம் வாங்கிய ஆசிரியர் மேல சமூக ஆர்வலர் ஒருத்தர் போலீஸ்ல புகார் குடுத்திருக்காருப்பா...

“இப்ப, ஆசிரியர் மேலவழக்கு போட்டிருக்காங்க... இதை தெரிஞ்சுக்கிட்ட ஆசிரியர், முன்ஜாமின் வாங்க வக்கீல்களை தேடி ஓடிட்டு இருக்காருப்பா...” என்றார், அன்வர்பாய்.

“கொட்டும் மழையிலும்,பிறந்த நாள் விழா கொண்டாடுங்கோன்னு, 'டார்ச்சர்' பண்றா ஓய்...”என, கடைசி தகவலுக்குமாறினார் குப்பண்ணா.

“யாருங்க அது...” எனகேட்டார், அந்தோணிசாமி.

“சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 'துணை முதல்வர் உதயநிதியின் உதய நாள்' என்ற தலைப்புல, 364 சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும், 182 கூட்டங்களை நடத்தணும்'னு பகுதி நிர்வாகிகளுக்கு, மாண்புமிகுவா இருக்கற மாவட்ட நிர்வாகி உத்தரவு போட்டிருக்கார் ஓய்...

“சமீபத்துல சென்னைவிருகம்பாக்கம், 128வதுவட்டம் சார்பில், கொட்டும்மழையிலும் பொதுக் கூட்டத்தை நடத்தியிருக்கா... அதுக்கு மறுநாளும் மழை நீடிச்சதால, 129 வட்டம்சார்பில், தசரதபுரத்துல, 'கூட்டம் நடத்த முடியாது'ன்னு நிர்வாகிகள் மறுத்திருக்கா ஓய்...

“ஆனா பகுதி நிர்வாகியோ, 'புயலே அடிச்சாலும் பொதுக் கூட்டம் நடத்தணும்'னு கண்டிப்பா சொல்லி, நடத்த வச்சுட்டார்... 'டார்க்கெட்' நிர்ணயம் பண்ணி கூட்டத்தை நடத்துங்கோன்னு சொல்றதால, கீழ்மட்ட நிர்வாகிகள் நொந்து போயிருக்கா ஓய்...

“அது மட்டும் இல்லாம, மழையில பொதுக் கூட்டம் நடத்தினா, அதுல பேசறவாளோட பேச்சைகேட்க பொதுமக்கள்யாரும் வர்றதும் இல்ல...பேச்சாளர்களும் காலி சேர்களை பார்த்து, கடனேன்னு பேசிட்டு, 'பேட்டா'வை வாங்கிண்டு கிளம்பிடறா ஓய்...” எனமுடித்தார், குப்பண்ணா.

பேச்சு முடிய, பெஞ்ச்கலைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us