/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நான்குநேரி அருகே கள்ள நோட்டு வழக்கில் மேலும் இருவர் சிக்கினர் * சிவகாசியில் போலீசார் விசாரணை

PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM
நான்குநேரி:நான்குநேரி அருகே கள்ள நோட்டுகள் பிடிபட்ட விவகாரத்தில் மேலும் இருவர் சிக்கினர். இதுதொடர்பாக நெல்லை தனிப்படை போலீசார் சிவகாசியில் விசா-ரணை நடத்தினர்.
நெல்லை மாவட்டம், நான்குநேரி டோல்கேட்டில் கடந்த மாதம் 6ம் தேதி மூன்ற-டைப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு காரை போலீசார் சோதனை செய்த போது, ரூ. 60 லட்சம் கள்ளநோட்டுகள், 8 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, காரில் இருந்த சிவகாசியை சேர்ந்த சீமைச்சாமி, சங்கரன்கோவி-லைச் சேர்ந்த கிருஷ்ணசங்கர், கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய தொடர்புடைய சிவகாசி, பள்ளப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்தி-ரன்(38) தற்போது கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த தகவலின் பேரில், சிவகாசியைச் சேர்ந்த மணிகண்டன், சுரேஷை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். விசாரணையில்
கள்ள நோட்டுகள் சிவகாசியில் அச்சிடப்பட்ட இடம் குறித்து போலீசாருக்கு தெரியவந்தது.
இக்கும்பலுக்கு வேறு எங்கும் குடோன் உள்ளதா, கள்ள நோட்டு வழக்கில் வேறு யாருக்கு தொடர்புள்ளது என கண்டறிய நெல்லை மாவட்ட போலீசார் சிவகாசி-யில் விசாரணை நடத்துகின்றனர். கள்ள நோட்டு அச்சிடுவதற்கு பயன்படுத்தப்-பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இக்கும்பலுடன் தொடர்புடைய நபர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளனரா என்றும் விசாரணை நடக்கிறது.