தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தி.மு.க., கூட்டணியில் ஒரு தொகுதிக்கு 2 கட்சிகள் போட்டி!

 தி.மு.க., கூட்டணியில் ஒரு தொகுதிக்கு 2 கட்சிகள் போட்டி!

 தி.மு.க., கூட்டணியில் ஒரு தொகுதிக்கு 2 கட்சிகள் போட்டி!


PUBLISHED ON : ஜன 20, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2026 02:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''க டமையை செய்தவரை காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பிட்டா ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''சென்னையில் போக்குவரத்து போலீசார், இரவு நேரங்கள்ல வாகன சோதனை நடத்தறால்லியோ... போன வாரம், நுங்கம்பாக்கத்துல இப்படி சோதனை நடத்திய ஒரு அதிகாரி, மது போதையில் கார் ஓட்டிண்டு வந்த வருமான வரித்துறை அதிகாரியை நிறுத்தி, வழக்கு பதிவு பண்ணிட்டார் ஓய். ..

''இதனால, ஆத்திரமான அந்த வருமான வரி அதிகாரி, 'என் மேலயே வழக்கு போடறேளா...'ன்னு கோபப்பட்டு, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிக்கு போன் போட்டு, ஆதங்கத்தை கொட்டியிருக்கார்... உயர் போலீஸ் அதிகாரியும், 'வழக்கு போட்டவர் மேல நடவடிக்கை எடுக்கிறேன்'னு சொல்லி, அந்த அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாத்திட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, ''கவாஸ்கர், கவலைப்படாதீங்க... உங்களுக்கு வேலை ஒண்ணும் கொடுக்காம வச்சிட்டாங்களா... எல்லாம் சரியாயிடும்...'' எனக் கூறி போனை வைத்தபடியே, ''வசூல் வேட்டைக்கு ரெடியாகி றாங்க...'' என்றார்.

''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''பத்திரப்பதிவு பணிகளை சார் - பதிவாளர்கள் தான் செய்வாங்க... ஆனா, நிறைய இடங்கள்ல, மாவட்ட பதிவாளர்கள் பதிவு பணியில் இருந்து, வசூல் வேட்டை நடத்திட்டு இருந்தாங்க...

''இது சம்பந்தமா நிறைய புகார்கள் வரவே, சில வருஷங்களுக்கு முன்னாடி, பதிவு பணியில் இருந்து மாவட்ட பதிவாளர்களை விடுவிச்சிட்டாங்க... இதனால, காய்ஞ்சி போய் கிடந்த மாவட்ட பதிவாளர்கள், மீண்டும் தங்களுக்கு பதிவு பணி கேட்டுட்டு இருந்தாங்க...

''இந்த கோரிக்கைக்கு, பதிவுத்துறை உயர் அதிகாரிகளும் பச்சைக்கொடி காட்ட தயாராகிட்டாங்க... ஏற்கனவே, 200 இடங்கள்ல, உதவியாளர்கள் தான், சார் - பதிவாளர் பொறுப்பை கவனிக்கிறாங்க... இப்ப, அவங்களுக்கு போட்டியா மாவட்ட பதிவாளர்களும் களமிறங்கி, வசூல் வேட்டையில கலக்க போறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''ஒரே தொகுதிக்கு ரெண்டு கட்சிகள் குறி வைக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.,வா, காங்கிரசின் கருமாணிக்கம் இருக்காரு... தி.மு.க., கூட்டணியில் சேர விரும்பும் நடிகர் கருணாசின், முக்குலத்தோர் புலிப்படை கட்சியும், இந்த தொகுதியில் போட்டியிட விரும்புது வே...

''ஏற்கனவே, அ.தி.மு.க., கூட்டணியில் இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வா, கருணாஸ் இருந்திருக்காரு... இதுக்கு இடையில, காங்கிரஸ்லயே கருமாணிக்கத்துக்கு போட்டியா, தமிழக காங்., துணை தலைவர் சொர்ணா சேதுராமனும் இந்த தொகுதிக்கு குறி வச்சிருக்காரு வே...

''கடந்த லோக்சபா தேர்தல்ல இவருக்கு 'சீட்' உறுதியாகி, கடைசி நேரத்துல பட்டியல்ல இருந்து பெயரை துாக்கிட்டாவளாம்... அதனால, இந்த முறை இவருக்கு சீட் வழங்க, டில்லி மேலிடமும் தயாரா இருக்கு வே...

''இதுக்கு மத்தியில, நடிகர் கருணாஸ், 'திருவாடானையை தந்தா, தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்துலயே போட்டியிடவும் தயார்'னு துாண்டிலை வீசியிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி .

அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us