sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

கோவில் வளாகத்தில் கூத்தடிக்கும் இருவர் கூட்டணி!

/

கோவில் வளாகத்தில் கூத்தடிக்கும் இருவர் கூட்டணி!

கோவில் வளாகத்தில் கூத்தடிக்கும் இருவர் கூட்டணி!

கோவில் வளாகத்தில் கூத்தடிக்கும் இருவர் கூட்டணி!

1


PUBLISHED ON : டிச 03, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 03, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''யானை தாக்கி இறந்தவா குடும்பத்துக்கு, மூணு தரப்பிலும் நிவாரண நிதி குடுத்திருக்கா ஓய்...'' என்றபடிபெஞ்சில் அமர்ந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை தாக்கி, பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் இறந்துபோயிட்டால்லியோ... இவா குடும்பங்களுக்கு, முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் குடுத்தா ஓய்...

''கோவில் நிர்வாகத்தில்இருந்து, 5 லட்சம் ரூபாயும், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் சார்பில், 3 லட்சம்ரூபாயும் குடுத்திருக்கா...இதுல, அரசு, கோவில் தந்த நிவாரண தொகை 7 லட்சத்தை வங்கியில போட்டு, அதன் வட்டியைகுடும்ப செலவுக்கும், தக்கார் தந்த நிவாரண தொகையை, ரெண்டு பேரின் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கும் பயன்படுத்திக்க சொல்லியிருக்கா ஓய்...'' என்றார்,குப்பண்ணா.

''அடாவடியா வசூல் பண்றாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.

''யாரை சொல்றீங்க...''என கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை ஏர்போர்ட்லமல்டி லெவல் கார் பார்க்கிங் இருக்குதே... இதை, தனியார் நிறுவனம்தான் பராமரிக்குது பா...

''விமானங்கள் வருகை பகுதியில் நிறுத்துற கார், பைக்குகள்ல யாருக்கும் தெரியாம பூட்டு போட்டுட்டு, அபராதம் கட்டும்படி அடாவடி பண்றாங்க... 'அவசரமா கிளம்பறோம்'னு சொன்னாலும் வழி மறிச்சு,'அபராதம் கட்டுனா தான்விடுவோம்'னு கெடுபிடி காட்டுறாங்க பா...

''அபராதம் கட்டுனா அதுக்கு முறைப்படி ரசீதும் தர்றது இல்ல... அவ்வளவு ஏன்... அந்த பகுதியில நிறுத்துற போலீசார் பைக்கையும் சில நேரம் பூட்டிடுறாங்க... போலீசாரும், 'எங்களுக்கே இந்த கதியா'ன்னு புலம்புறாங்கபா...'' என்றார், அன்வர்பாய்.

''கோவில்ல கூத்தடிக்காவ வே...'' என்ற பெரியசாமிஅண்ணாச்சியே தொடர்ந்தார்...

''திருச்சி, உறையூர்ல பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் இருக்குல்லா... இங்க, இரவு காவலர்களா இருக்கிற ரெண்டு பேர் பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியல வே...

''கோவிலுக்கு முக்கியஅதிகாரி யாரும் இல்லாததால, இவங்க ரெண்டுபேர் தான் நிர்வாகிகள்மாதிரி செயல்படுதாவ...இதுல ஒருத்தர், கோவில்விழாக்கள் பெயர்ல பணம் வசூல் பண்ணியே,உறையூர்ல 2 கோடி ரூபாய்க்கு வீடு கட்டிட்டாரு வே...

''சொந்த கார், நிலங்கள்னும் வாங்கி போட்டிருக்காரு... இன்னொருத்தர், 'ஆன்லைன்' டிக்கெட் எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே, போலி தரிசன டிக்கெட் அடிச்சு வித்து, பல லட்சங்களைசம்பாதிச்சாரு வே...

''இது மட்டுமில்ல... ரெண்டு பேரும் சேர்ந்து,கோவில்ல வேலை பார்க்கிற துப்புரவு பெண் தொழிலாளிகளை பாலியல் ரீதியாகவும் தொல்லை பண்ணுதாவ வே...

''சிலர் இவங்களுக்கு ஒத்துழைச்சாலும், சரிப்பட்டு வராத மற்ற பெண்களை மிரட்டுதாவ... சமீபத்துல ரெண்டுபெண் தொழிலாளிகளைவேலையில இருந்து நீக்கிட்டாவ... அதுவும், கோவில் வளாகத்துலயேஇந்த சேட்டைகளை செய்தாவ வே...

''தங்களுக்கு மேலிட செல்வாக்கு இருக்கிறமாதிரி காட்டிக்கிற ரெண்டுபேரும், கோவில் ஊழியர்களை மிரட்டி கட்டுப்பாட்டுல வச்சிருக்காவ... 'கோவிலின் புனிதத்தை கெடுக்கிற இவங்க மேல நடவடிக்கைஎடுக்கணும்'னு பக்தர்கள் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us