தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வேலையின்மை 5.10 சதவீதமாக அதிகரிப்பு

 வேலையின்மை 5.10 சதவீதமாக அதிகரிப்பு

 வேலையின்மை 5.10 சதவீதமாக அதிகரிப்பு


PUBLISHED ON : ஏப் 16, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2026 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டில் வேலையின்மை, கடந்த மார்ச் மாதத்தில் 5.10 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பிப்ரவரி மாதத்தில் 4.90 சதவீதமாக இருந்தது.

நகர்ப்புற வேலையின்மை விகிதம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பிப்ரவரியில் 6.60 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச்சில் 6.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற ஆண்களிடையே வேலையின்மை 6.10 சதவீதமாகவும்; பெண்களிடையே 9 சதவீதமாகவும் இருந்தது.

கிராமப்புற பெண்களிடையே வேலையின்மை மார்ச் மாதத்தில் பெரிய மாற்றமின்றி நிலையாக காணப்பட்டது. அதே நேரத்தில், கிராமப்புற ஆண்களுக்கான வேலையின்மை விகிதம் பிப்ரவரி மாதத்தை விட சற்றே அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 35.30 சதவீதத்தில் இருந்து 34.40 சதவீதமாக குறைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us