sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

10 நாட்களாக வௌ்ளத்தில் மிதக்குது வேலுார் பெண்கள் ஆவேசம்; மேயரிடம் வாக்குவாதம்

/

10 நாட்களாக வௌ்ளத்தில் மிதக்குது வேலுார் பெண்கள் ஆவேசம்; மேயரிடம் வாக்குவாதம்

10 நாட்களாக வௌ்ளத்தில் மிதக்குது வேலுார் பெண்கள் ஆவேசம்; மேயரிடம் வாக்குவாதம்

10 நாட்களாக வௌ்ளத்தில் மிதக்குது வேலுார் பெண்கள் ஆவேசம்; மேயரிடம் வாக்குவாதம்


PUBLISHED ON : அக் 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 29, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: வேலுார் மாநகராட்சியில், மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கலெக்டர் சுப்புலட்சுமி ஆய்வு செய்த போது, உடன் சென்ற தி.மு.க.,வை சேர்ந்த மேயர் சுஜாதாவிடம், 'ஓட்டு கேட்டு மட்டும் வருகிறீர்கள்? மழை பாதிப்புக்கு வருவதில்லை' என, பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் ஒரு வாரமாக கழிவுநீரோடு, மழைநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், முள்ளிப்பாளையம், காந்தி நகர், ஜீவா நகர் உட்பட, ஏழு இடங்களில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதை வேலுார் கலெக்டர் சுப்புலட்சுமி, மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன், மேயர் சுஜாதா அகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நின்ற கழிவுநீரில் வீதி, வீதியாக சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களை கலெக்டர் சுப்புலட்சுமி விசாரித்து, குறைகளை கேட்டார். அப்போது, உடன் சென்ற மேயரிடம், இந்திராநகர் பெண்கள் சிலர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'ஓட்டுக்காக மட்டுமே நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் கொ டுக்கும் பாய், போர்வையை வைத்து நாங்கள் என்ன செய்வது? எங்கள் வீட்டில் ஏற்கனவே அவையெல்லாம் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் உணவில் கூட பாகுபாடு பார்க்கிறீர்கள்' என, குற்றஞ்சாட்டினர்.

இதனால், மேயர் சுஜாதாவுக்கும், அந்த பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கலெக்டர் சுப்புலட்சுமி, சமாதானப்படுத்தி, தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கலெக்டர் கூறியதாவது:

வேலுார் மாநகராட்சி பிரதான வடிகாலான நிக்கல்சன் கால்வாயில் இருந்து மழைநீர் வெளியேறாத வண்ணம், 599 மணல் மூட்டைகளை தயார் செய்து வைத்துள்ளோம். கன்சால்பேட்டை பகுதியை சேர்ந்த, 176 மக்கள் இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதம் இருப்பவர்களை முகாமிற்கு வரவழைக்க ஏற்பாடு நடக்கிறது.

நிக்கல்சன் கால்வாய், கா ட்பாடி, கழிஞ்சூர் பகுதி அதிகம் பாதிக்க ப்பட்டுள்ளது. நிக்கல்சன் கால்வாயில் மூன்று இடங்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தவும், அதன் தடுப்பு சுவர்களை உயர்த்தவும் நடவடி க்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us