/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
துாங்கியோர் மீது போலீஸ் தடியடி பாதிக்கப்பட்டோர் மறியல்
/
துாங்கியோர் மீது போலீஸ் தடியடி பாதிக்கப்பட்டோர் மறியல்
துாங்கியோர் மீது போலீஸ் தடியடி பாதிக்கப்பட்டோர் மறியல்
துாங்கியோர் மீது போலீஸ் தடியடி பாதிக்கப்பட்டோர் மறியல்
PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM
கோயம்பேடு,
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்து, ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன.
இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத நடைமேடைகளை பலர், இரவு துாங்கும் இடமாக மாற்றி உள்ளனர். வெளியூர்களில் இருந்து கூலி வேலைக்காக சென்னைக்கு வந்த பலர், இரவு நேரத்தில் இங்கு துாங்குகின்றனர்.
மேலும் ஆதரவற்றோர், முதியோர், பயணியரும் பேருந்து நிலைய வளாகத்தில் துாங்குவது வாடிக்கை. இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தில் துாங்கியவர்களை நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், கோயம்பேடு போலீசார் தடியடி நடத்தி அகற்றினர்.
இதில், சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 11:30 மணியளவில் 100 அடி சாலை பேருந்து நிலைய முகப்பில் அமர்ந்திருந்த 100க்கும் மேற்பட்டோர், திடீரென போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸ் உயரதிகாரிகள், அவர்களிடம் சமரசம் பேசினர்.
பாதிக்கப்பட்ட நபர்களை மீண்டும் பேருந்து நிலையத்தில் துாங்க அனுமதித்ததால், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.