PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் மாவட்டம், க.பரமத்தி காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 38. இவருக்கு, ஜெயசூர்யா, 36, என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த, 4ல் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற, ஜெயசூர்யா வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், ஜெயசூர்யா செல்லவில்லை.
இதனால், ஜெயசூர்யாவின் கணவர் கோபாலகிருஷ்ணன், மனைவியை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.