PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத் விடுதலை தினம்
சுதந்திரம் பெற்ற போது பல சமஸ்தானங்களாக இந்தியா பிரிந்து இருந்தது. இவற்றை அப்போதைய உள்துறை அமைச்சர் 'இரும்பு மனிதர்' என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் ஒன்றிணைத்தார். இதில் சில ராணுவ நடவடிக்கை மூலம் சேர்க்கப்பட்டது. அதில் ஒன்று ஐதராபாத். 'ஆப்பரேஷன் போலோ' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையால் 1948 செப். 17ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஐதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில் இந்தாண்டு முதல் மத்திய அரசு சார்பில் செப். 17ல் ஐதராபாத் விடுதலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

